பொது செய்தி

தமிழ்நாடு

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

Added : டிச 31, 2020
Share
Advertisement
கடலுார்; கடலுார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2021 ம் ஆண்டு மே மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கான அறிவிக்கை வெளியிடப்படும் என

கடலுார்; கடலுார், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2021 ம் ஆண்டு மே மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கான அறிவிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் கடலுார் மாவட்ட வேலை நாடுநர்கள் பயனடைய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 06.01.202௧ முதல் வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது.இப்பயிற்சி வகுப்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்விற்கான பாடக் குறிப்புகள் வழங்குவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.இவ்வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 04142 -290039 என்ற தொலைபேசி எண்ணில் பதிந்து, வகுப்புகளில் பங்கேற்று பயன் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X