சென்னை : டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் ஜன., 3 நடத்தப்படும் 'குரூப் - 1' தேர்வில் இருந்து அமலாகிறது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விடைத் தாளில் விடைகளை குறிக்க கருப்பு நிற பால் பாயின்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். உரிய இடங்களில் கையொப்பமிட்டு இடது கை பெருவிரல் ரேகையை பதிக்க வேண்டும்.விடை தெரியாவிட்டால் விடைத்தாளில் ஐந்தாவது குறிப்பை கருமையாக்க வேண்டும். ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்ப வேண்டும். இந்த எண்ணிக்கை தவறானால் ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

இந்த செயலை மேற்கொள்ள தேர்வு நேரம் முடிந்தபின் 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். இந்த நடைமுறை ஜன., 3ல் 'குரூப் - 1' முதல் நிலை தேர்வு முதல் வருங்காலத்தில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE