கடலுார்; கடலுார் மாவட்டத்தில் மீண்டும் பரவலான மழை பெய்தது. அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 12 மி.மீ., மழை பெய்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடந்த 29 ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை மீண்டும் வடகிழக்குப் பருவ மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. கடல் அதிகளவு சீற்றமாக இருந்தது. நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு:கொத்தவாச்சேரி 12மி.மீ., லால்பேட்டை 8.4, காட்டுமன்னார்கோவில் 7.1, அண்ணாமலை நகர் 4, பரங்கிப் பேட்டை 3.8, கலெக்டர் அலுவலகம் 2.9, கடலுார் 2.6, ஸ்ரீமுஷ்ணம் 2.1 சிதம்பரம் 2, சேத்தியாத் தோப்பு 2,குறிஞ்சிப்பாடி 2, விருத்தாசலம் 1.4, பெலாந்துறை 1மி.மீ., மழை பெய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE