பொது செய்தி

தமிழ்நாடு

வாசன் பிறந்தநாள் விழா

Added : டிச 31, 2020
Share
Advertisement
சிதம்பரம் - சிதம்பரத்தில் த.மா.கா., தலைவர் வாசன் பிறந்த நாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சிதம்பரம் மந்தக்கரையில் உள்ள செல்லியம்மன் கோவிலில், அண்ணாமலை நகர் பூமா கோவில், வண்டிகேட்டில் உள்ள சர்ச்சில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. த.மா.கா., மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா தலைமை தாங்கினார். வாசன் நற்பணி இயக்க நிறுவனர்

சிதம்பரம் - சிதம்பரத்தில் த.மா.கா., தலைவர் வாசன் பிறந்த நாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சிதம்பரம் மந்தக்கரையில் உள்ள செல்லியம்மன் கோவிலில், அண்ணாமலை நகர் பூமா கோவில், வண்டிகேட்டில் உள்ள சர்ச்சில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. த.மா.கா., மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா தலைமை தாங்கினார். வாசன் நற்பணி இயக்க நிறுவனர் முத்துக்குமார் வரவேற்றார். நிர்வாகிகள் குமார், பட்டாபிராமன், நடராஜன், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயச்சந்திரன் பங்கேற்று 56 ஏழை மக்களுக்கு வேட்டி,சேலை வழங்கினார். மாரியப்பா நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் பிஸ்கட், பழங்கள், முகக்கவசம் வழங்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் பாபு சந்திரசேகர், நகர மூத்த துணைத் தலைவர் சம்மந்தமூர்த்தி, முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் தில்லை குணா, மாவட்ட செயலாளர் குமார், இன்பரசு, நகர துணைத் தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நகர துணைத் தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X