பொது செய்தி

தமிழ்நாடு

மது அருந்தி வாகனம் ஓட்டாதீர்

Added : டிச 31, 2020
Share
Advertisement
திருவள்ளூர் - ஆங்கில புத்தாண்டு தினமான நாளை, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என, எஸ்.பி., எச்சரிக்கைவிடுத்துள்ளார்.திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அரவிந்தன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில், குற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் சாலை

திருவள்ளூர் - ஆங்கில புத்தாண்டு தினமான நாளை, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என, எஸ்.பி., எச்சரிக்கைவிடுத்துள்ளார்.திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அரவிந்தன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில், குற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் சாலை விபத்தை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைகளில், 2 கிலோ மீட்டருக்கு, ஒரு வேக தடுப்பு அமைக்கப்படும்.காவல் ஆய்வாளர் தலைமையில், வாகன தணிக்கை செய்து, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர், அதிவேக வாகன ஓட்டிகளின் மீது அதிகளவில் வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில், அதிகளவில் பொதுமக்கள் கூடாமல் இருக்க, மாவட்ட காவல் துறை சார்பாக, ஒலிப்பெருக்கி மூலம் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மேலும், பழவேற்காடு கடற்கரை, பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு, வரும், 3ம் தேதி வரை, பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, மாவட்டத்தில், பாதுகாப்பு அலுவலராக, இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்; ஒன்பது காவல் துணை கண்காணிப்பாளர்; 18 ஆய்வாளர்; 78 உதவி ஆய்வாளர், 170 சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் 675 காவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X