பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர், டி.ஆர்.ஓ., காரில் இருந்த 'பம்பர்' அகற்றம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
திருவள்ளூர் - நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, திருவள்ளூர் கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ., ஆகியோரின் கார்களில் இருந்த, 'பம்பர்' அகற்றப்பட்டன.நான்கு சக்கர வாகனங்களில், 'புல் பார் பம்பர்' அகற்ற வேண்டும் என, போக்குவரத்து துறையினர் உத்தரவிட்டிருந்தனர். போலீசார், வாகன சோதனை நடத்தி, கார்களின் முன்பாக பொருத்தப்பட்டிருந்த, 'பம்பர்'களை அகற்றி, அபராதம் விதித்து

திருவள்ளூர் - நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, திருவள்ளூர் கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ., ஆகியோரின் கார்களில் இருந்த, 'பம்பர்' அகற்றப்பட்டன.நான்கு சக்கர வாகனங்களில், 'புல் பார் பம்பர்' அகற்ற வேண்டும் என, போக்குவரத்து துறையினர் உத்தரவிட்டிருந்தனர். போலீசார், வாகன சோதனை நடத்தி, கார்களின் முன்பாக பொருத்தப்பட்டிருந்த, 'பம்பர்'களை அகற்றி, அபராதம் விதித்து வருகின்றனர்.அரசு வாகனங்களில் உள்ள பம்பர்களை அகற்ற வேண்டும் என, தலைமைச் செயலர் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், திருவள்ளூர் கலெக்டர், டி.ஆர்.ஓ., உள்ளிட்ட, ஒரு சில அதிகாரிகளின் கார்களில் இருந்த, பம்பர் அகற்றப்படாமல் இருந்தது.இது குறித்து செய்தி வெளியானதையடுத்து, நேற்று காலை, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்த கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ., ஆகியோர்களின் கார்களில் பொருத்தப்பட்டிருந்த, 'பம்பர்' அகற்றப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X