கார்வண்ண பெருமாள் மண்டபம் இடியும் அபாயம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் வளாகத்தில், இடிந்து விழும் நிலையில் உள்ள கார்வண்ண பெருமாள் சன்னிதியை, அறநிலையத் துறை கண்டு கொள்ளவில்லை என, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரத்தில், 108 திவ்ய தேச கோவில்களில் ஒன்றான, உலகளந்த பெருமாள் கோவில் சிறப்புமிக்கது.இந்த கோவில் வளாகத்தில், ஊரகத்தான், காரகத்தான், நீரகத்தான், கார்வண்ணப் பெருமாள் என,

காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் வளாகத்தில், இடிந்து விழும் நிலையில் உள்ள கார்வண்ண பெருமாள் சன்னிதியை, அறநிலையத் துறை கண்டு கொள்ளவில்லை என, பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரத்தில், 108 திவ்ய தேச கோவில்களில் ஒன்றான, உலகளந்த பெருமாள் கோவில் சிறப்புமிக்கது.இந்த கோவில் வளாகத்தில், ஊரகத்தான், காரகத்தான், நீரகத்தான், கார்வண்ணப் பெருமாள் என, நான்கு திவ்ய தேச சன்னிதிகள் உள்ளன.இதில், கொடி மரம் அருகே உள்ள கார்வண்ணப் பெருமாள் சன்னிதியின் வெளி மண்டப கூரை, மர சட்டகத்தால் கட்டப்பட்டது. இது சிதிலமடைந்து, இரு ஆண்டுகளாகியும், அறநிலையத் துறை கண்டுகொள்ளவில்லை.பக்தர்கள் கூறியதாவது:மண்டபம் இடிந்து விழாமல் இருக்க, சவுக்கு கம்புகளால் முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலில் தரிசனம் முடிந்து, வெளிப்புறத்தை சுற்றிச் செல்லும் பக்தர்கள், கடைசியில் கார்வண்ணப் பெருமாளை தரிசனம் செய்து, அங்குள்ள படிக்கட்டில் அமர்ந்து செல்வது வழக்கம். தற்போதும், பக்தர்கள் அங்கு உட்காருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் விழக்கூடிய நிலையில் இருப்பதால், அவர்கள் அச்சப்படுகின்றனர். மண்டபத்தை சீரமைக்க, அறநிலையத் துறை அக்கறை காட்டவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X