பொது செய்தி

தமிழ்நாடு

எளிய மக்களுக்கு காப்பீடு திட்டத்தில் சேர பெயர் பதிவு

Added : டிச 31, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம்; வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு, 'அம்மா' மருத்துவ காப்பீடு திட்ட கார்டு வழங்க, பெயர் பதிவு செய்யும் பணி, காஞ்சிபுரத்தில் நடந்து வருகிறது.வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு, தமிழக அரசு சார்பில், அம்மா மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த அட்டை பெறும் பயனாளிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டால்,

காஞ்சிபுரம்; வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு, 'அம்மா' மருத்துவ காப்பீடு திட்ட கார்டு வழங்க, பெயர் பதிவு செய்யும் பணி, காஞ்சிபுரத்தில் நடந்து வருகிறது.வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு, தமிழக அரசு சார்பில், அம்மா மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த அட்டை பெறும் பயனாளிகள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டால், குறிப்பிட்ட தொகை செலுத்தினால் போதுமானது.காஞ்சிபுரம் நகராட்சியில், அந்தந்த வார்டு பகுதியில் வசிக்கும் மக்களின் விபரம் சேகரித்து, இத்திட்டத்தில் பயன் பெறும் வகையில், பெயர் பதிவு செய்யும் பணி, நகராட்சி சார்பில் அண்ணா அரங்கில் நடந்து வருகிறது.நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவதுபயனாளிகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் நகலை எடுத்து செல்ல வேண்டும். நகராட்சி பணியாளர்கள், இவற்றை பெற்று, ஆன்லைனில் பதிவிடுவர்.நகராட்சியில், 51 வார்டுகளில், ஏழை எளிய மக்கள் பதிவு செய்யும் வகையில், அதற்கான வசதி செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த, 'டோக்கன்' வழங்கப்படுகிறது.பெற்றப்பட்ட விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, இரு மாதங்களில், காப்பீடு திட்டத்திற்கான அட்டை வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X