பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாய் கான்கிரீட் தடுப்பு பணி முடிந்ததுமே சேதம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்வாய்களுக்கு அமைக்கப்படும் கான்கிரீட் கால்வாய் தடுப்புகள், தரமின்றி அமைப்பதால் சேதமடைகின்றன என, புகார் எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், வட்டார வளர்ச்சி நிர்வாகங்களின் பொறுப்பில், ஏரிகள், குளங்கள், நீர்வரத்து கால்வாய்கள் ஆகியவை உள்ளன. இவை, பராமரிக்கப்படாமல், துார்ந்து சீரழிந்தன.வட்டார வளர்ச்சி நிர்வாகங்கள், குளங்கள், கால்வாய்

செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்வாய்களுக்கு அமைக்கப்படும் கான்கிரீட் கால்வாய் தடுப்புகள், தரமின்றி அமைப்பதால் சேதமடைகின்றன என, புகார் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், வட்டார வளர்ச்சி நிர்வாகங்களின் பொறுப்பில், ஏரிகள், குளங்கள், நீர்வரத்து கால்வாய்கள் ஆகியவை உள்ளன. இவை, பராமரிக்கப்படாமல், துார்ந்து சீரழிந்தன.வட்டார வளர்ச்சி நிர்வாகங்கள், குளங்கள், கால்வாய் உள்ளிட்டவற்றை துார் வாரி, கரை பகுதிக்கு கான்கிரீட் தடுப்பு அமைக்கிறது.அதன்படி, கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கத்தில், கால்வாயில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்பு பெயர்ந்துள்ளது. இப்பணிகளை கண்காணித்து, தரத்தை சோதிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள், அலட்சியப்படுத்துகின்றனர். இது, ஒப்பந்ததாரர்களின் முறைகேடுக்கு, உடந்தையாக இருக்கிறது.இதனால், பணியில் தரமின்றி, பக்கவாட்டு கான்கிரீட் தடுப்பு, பணி முடிந்ததுமே, பெயர்ந்து சேதமடைகிறது. இதுகுறித்து, குற்றம் சாட்டும் பொதுமக்கள், இப்பணிகளை, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X