பொது செய்தி

தமிழ்நாடு

பயனாளிகளுக்கு இலவச கால்நடைகள் வழங்கல்

Added : டிச 31, 2020
Share
Advertisement
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு, 200 பயனாளிகளுக்கு பசு மாடுகளும், 2,588 பயனாளிகளுக்கு ஆடுகளும் வழங்கப்படுகிறது.ஏழை, எளிய மக்கள், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்கு வழிவகுக்கும் வகையில், விலையில்லா ஆடு, மாடுகளை, அரசு வழங்கி வருகிறது.வரும் மார்ச் வரையிலான இந்த ஆண்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 200 பயனாளிகளுக்கு மாடுகள் வழங்கப்பட உள்ளது. 243 பயனாளிகளுக்கு

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு, 200 பயனாளிகளுக்கு பசு மாடுகளும், 2,588 பயனாளிகளுக்கு ஆடுகளும் வழங்கப்படுகிறது.

ஏழை, எளிய மக்கள், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்கு வழிவகுக்கும் வகையில், விலையில்லா ஆடு, மாடுகளை, அரசு வழங்கி வருகிறது.வரும் மார்ச் வரையிலான இந்த ஆண்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 200 பயனாளிகளுக்கு மாடுகள் வழங்கப்பட உள்ளது. 243 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டு உள்ளன.இது குறித்து, கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பினாயூர், கிளார், கீழ்பேரமநல்லுார் ஆகிய பகுதிகளில், 141 பயனாளிகளுக்கு மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.அதேபோல், புளியம்பாக்கம், ஒரக்காட்டுப்பேட்டை, பழவேரி, புத்தாகரம், பரந்துார் ஆகிய கிராமங்களில், 243 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.மேலும் பிப்ரவரிக்குள், 2,588 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, ஆடுகள் கொள்முதல் பணி நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X