காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு, 200 பயனாளிகளுக்கு பசு மாடுகளும், 2,588 பயனாளிகளுக்கு ஆடுகளும் வழங்கப்படுகிறது.
ஏழை, எளிய மக்கள், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்கு வழிவகுக்கும் வகையில், விலையில்லா ஆடு, மாடுகளை, அரசு வழங்கி வருகிறது.வரும் மார்ச் வரையிலான இந்த ஆண்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 200 பயனாளிகளுக்கு மாடுகள் வழங்கப்பட உள்ளது. 243 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டு உள்ளன.இது குறித்து, கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பினாயூர், கிளார், கீழ்பேரமநல்லுார் ஆகிய பகுதிகளில், 141 பயனாளிகளுக்கு மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.அதேபோல், புளியம்பாக்கம், ஒரக்காட்டுப்பேட்டை, பழவேரி, புத்தாகரம், பரந்துார் ஆகிய கிராமங்களில், 243 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.மேலும் பிப்ரவரிக்குள், 2,588 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக, ஆடுகள் கொள்முதல் பணி நடந்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE