இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையும், ராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் மற்றும் குருசந்திரா மாளிகை இணைந்து வழங்கிய, 16ம் ஆண்டு மார்கழி இசை நிகழ்ச்சி, குருசந்திரா மாளிகை, வியாசர்பாடி, சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த, 25ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, நாட்டியம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும், 'வள்ளலாரின் வரலாறும் பணியும்' குறித்து, பிரபல பேச்சாளர்களின் உரைகளும் நிகழ்த்தப்பட்டன.கடைசி நாள் நிகழ்வாக, சீர்காழி மூவராகிய அருணாசலக்கவி, மாரிமுத்தா பிள்ளை மற்றும் முத்துத்தாண்டவர் ஆகியோரின் பாடல்களைப் பிரத்யேகமாகப் பாடி, உமாசங்கர் அவர்களை கவுரவித்தார்.இவருக்கு உடன் பக்கவாத்தியமாக இருந்தவர்கள், வி.எஸ்.கே.சக்ரபாணி வயலின், வழுவூர் ரவி மிருதங்கம் மற்றும் எர்ணாகுளம் ராமகிருஷ்ணன் கடம். உமாசங்கர் அளித்த பாடல்கள் பின்வருமாறு:இந்த பாடல்கள் அனைத்துக்கும் மெட்டமைத்தவர் உமாசங்கர்.உமாசங்கர் புகழ்பெற்ற, கர்நாடக இசை பாடகியரான சி.சரோஜா, சி.லலிதா சகோதரியரின் மாணவர்.சரோஜா, லலிதா சகோதரியர், 60 ஆண்டுகளுக்கு மேலாக பாடிஉள்ளனர். இந்த அளவிற்கு அனுபவம் மிக்க எவருமே, இசையுலகில் இல்லை எனலாம்.எல்லா வாக்கேயக்காரர்கள், அனைத்து பாடல் ஆசிரியர்களின் பாடல்களையும், மொழி பாகுபாடின்றி - தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் எனும் மொழிகளில் பாடியுள்ளனர்.'பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி' உட்பட, எல்லா விருதுகளும் அவர்களை வந்தடைந்துள்ளன.இசைக்கு அவர்கள் ஆற்றும் சேவையாக, உதவித் தொகைகளையும், அறக்கட்டளைகள் மூலம் ஊக்கத் தொகைகளையும், இசை கற்க வருவோருக்கு வழங்கி வந்திருக்கின்றனர்.
உமாசங்கர், 'தேடித் திரியாதே...' என்ற பாடலுக்கு, ஸ்வரங்களை அமைத்து, பாடி சிறப்பித்தார். 'உலகெலாம்' என்ற விருத்தத்தின் மூலமாகவும், அதை தொடர்ந்து வந்த, 'தெய்வீக ஸ்தலம்...' பாடலுக்கு முன்னும், 'பூர்விகல்யாணி' ஆலாபனையை அதன் ராகஸ்வரூபம் கேட்போர் மனதில் பதியும்படி பாடிச் சென்றார்.இதை போலவே, கடைசியில் பாடிய மத்யமாவதில் அமைந்த, 'சோபனம்' பாடலுக்கு, அணிந்துரையாக ஒரு சிறந்த செறிவான ஆலாபனை அளித்தார். வயலினில் சக்ரபாணி, தன் ஆலாபனையில் ராக விஸ்தாரங்களை சுருக்கத்துடன், ஆனால் அவை நன்றாக வெளிப்படும்படி வாசித்தளித்தார்.
லயப்பிரிவினரான மிருதங்கத்தில் வழுவூர் ரவியும், கடவாத்தியத்தில் எர்ணாகுளம் ராமகிருஷ்ணனும் பாடல்களுக்கு உகந்தபடி வாசித்தனர். ஒரு சிறிய தனியாவர்தனத்தையும் வழங்கி சிறப்பித்தனர்.- எஸ்.சிவகுமார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE