சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோவில் கஞ்சா கடத்தல்: சினிமா இயக்குனர் கைது

Added : டிச 31, 2020
Share
Advertisement
வியாசர்பாடி; வியாசர்பாடியில், ஆட்டோவில் கஞ்சா கடத்திய சினிமா இயக்குனர் உட்பட, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை, வியாசர்பாடி மற்றும் எம்.கே.பி.நகரில், கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று வியாசர்பாடி, அசோக் பில்லர் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி சென்ற ஆட்டோவை மடக்கி சோதனை

வியாசர்பாடி; வியாசர்பாடியில், ஆட்டோவில் கஞ்சா கடத்திய சினிமா இயக்குனர் உட்பட, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை, வியாசர்பாடி மற்றும் எம்.கே.பி.நகரில், கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று வியாசர்பாடி, அசோக் பில்லர் பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி சென்ற ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில், 11 கிலோ கஞ்சா கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.இதையடுத்து, ஆட்டோவில் இருந்த, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த முருகேசன், 43, மனோகரன், 36, முகப்பேர் மேற்கு பத்மநாபன், 30, அயப்பாக்கம் மணிமாறன், 30, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இவர்கள், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திச்சென்று, சென்னையின் பல்வேறு இடங்களில் விற்று வந்தது தெரியவந்தது. இவர்களில் பொன்முருகேசன் என்பவர் சினிமா இயக்குனர்.தற்போது, மவுனமே காதலாய் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீசார், 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.l தாம்பரம் அடுத்த பதுார் -- வெங்கம்பாக்கம் சந்திப்பு அருகே, சேலையூர் போலீசார், நேற்று முன்தினம் மாலை, 7:30 மணியளவில், ரோந்து சென்றனர். அப்போது, திருவஞ்சேரி, அண்ணா தெருவைச் சேர்ந்த, மணிகண்டன், 20, உட்பட, ஐந்து பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம், 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள், தாழம்பூர், கண்டிகை பகுதிகளில் இருந்து, கஞ்சா வாங்கி வருவதாக, போலீசாரிடம் கூறினர். ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X