பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கமிஷனர்

Added : டிச 31, 2020
Share
Advertisement
சென்னை; சென்னையில் நடந்த, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.சென்னை போலீஸ் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, 'தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு' என்ற தலைப்பில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில், 73 பள்ளிகளைச் சேர்ந்த, 316

சென்னை; சென்னையில் நடந்த, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.சென்னை போலீஸ் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, 'தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு' என்ற தலைப்பில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில், 73 பள்ளிகளைச் சேர்ந்த, 316 மாணவர்கள் பங்கேற்றனர்.இவர்களுக்கு, மூன்று கட்டங்களாக பேச்சு போட்டி நடத்தப்பட்டு, மண்டல அளவில், 19 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் மற்றும் ஆங்கிலம் என, தலா, மூன்று பேர் என, மொத்தம், ஆறு பேர், முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, சென்னை வேப்பேரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.அதேபோல, மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி கோரி விண்ணப்பித்து இருந்த, காவலர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் என, 21 பேருக்கு, காவலர் சேம நல நிதியில் இருந்து, 30.35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கமிஷனர் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X