சென்னை - சென்னையில் பொருத்துவதற்காக, 1,200 நவீன, 'பில்லர் பாக்ஸ்' எனப்படும் மின் வினியோக பெட்டிகளை, மின் வாரியம் வாங்க உள்ளது.
சென்னையில், வீடுகள், கடைகள் உள்ளிட்ட இணைப்புகளுக்கு, மின் வினியோகம் செய்வதில், மின் வினியோக பெட்டி முக்கிய சாதனமாக திகழ்கிறது. தற்போது, பயன்பாட்டில், 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் வினியோக பெட்டிகள் உள்ளன.இரும்பால் செய்யப்பட்ட மின் வினியோக பெட்டிகளில், இருபுறமும், கதவுகள் இருந்தன. முறையான பராமரிப்பு இல்லாததால், கதவுகள் சேதமடைந்துள்ளன.
இதனால், அவற்றில் உள்ள ஒயர்கள், வெளியில் தெரிகின்றன. மழையின் போது, தண்ணீர் தேங்குவதால், மின் வினியோக பெட்டிகளும் மூழ்கி விடுகின்றன. இதனால், அவற்றில் இருந்து வெளியேறும் மின் கசிவால், மின் விபத்து ஏற்படுகிறது.அதை தடுக்கும் வகையில், 'பீரோ' போன்ற நவீன மின் வினியோக பெட்டி பொருத்தப்பட்டு வருகிறது. அவற்றை, மின் ஊழியர்கள் மட்டுமே திறக்க முடியும். சென்னையின் பல்வேறு இடங்களில் பொருத்துவதற்காக, தற்போது, மின் வாரியம், 1,200 மின் வினியோக பெட்டிகளை வாங்க உள்ளது. இதற்காக, 1 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE