மதரசாக்களுக்கு எதிரான மசோதா அசாம் சட்டசபையில் நிறைவேற்றம்

Updated : டிச 31, 2020 | Added : டிச 31, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
கவுஹாத்தி : அசாம் மாநில சட்டசபையில் 'மதரசா' சிறப்பு பள்ளிகளை சராசரி பள்ளிகளாக மாற்றுவதற்கான மசோதா எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நேற்று நிறைவேறியது.அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில அரசின் நிதியுதவியுடன் முஸ்லிம்களால் நடத்தப்படும் மதரசா சிறப்பு பள்ளிகளை சராசரி பள்ளிகளாக மாற்றுவதற்கான மசோதா மாநில


கவுஹாத்தி : அசாம் மாநில சட்டசபையில் 'மதரசா' சிறப்பு பள்ளிகளை சராசரி பள்ளிகளாக மாற்றுவதற்கான மசோதா எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நேற்று நிறைவேறியது.



latest tamil news




அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு மாநில அரசின் நிதியுதவியுடன் முஸ்லிம்களால் நடத்தப்படும் மதரசா சிறப்பு பள்ளிகளை சராசரி பள்ளிகளாக மாற்றுவதற்கான மசோதா மாநில சட்டசபையில் கடந்த 28ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'இந்த மசோதாவை ஆய்வு செய்ய தேர்வு குழுவுக்கு அனுப்பிவைக்கவேண்டும்' என அவர்கள் வலியுறுத்தினர். எனினும் மாநில கல்வித் துறை அமைச்சர் பிஸ்வ சர்மா அதை ஏற்க மறுத்துவிட்டார்.


latest tamil news




இதையடுத்து எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் அந்த மசோதா குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த மசோதா நிறைவேறியுள்ளதால் மாநிலத்திலுள்ள அனைத்து மதரசாக்களும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் சராசரி பள்ளிகளாக இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nachiar - toronto,கனடா
31-டிச-202019:44:50 IST Report Abuse
Nachiar கடைசியில் உண்மையென்ன secularism. Better late than never ஜெய் ஹிந்
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
31-டிச-202018:58:54 IST Report Abuse
thulakol இது தான் சரியான மத சார்பற்ற கொள்கை
Rate this:
Cancel
31-டிச-202018:51:37 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மிக சிறந்த சட்டம், மதரசா என்கிற பெயரில் மூடத்தனத்தை வளர்க்கிறார்கள், அதில் படிப்பவர்களுக்கு கணக்கு, அறிவியல் போன்ற பாட புத்தகங்களே இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X