இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ரஜினிகாந்த், தன் உடல்நலனைக் கருதி எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கிறேன்.- நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்
'அடேங்கப்பா... அறிக்கையில் தான் என்னவொரு பணிவு, அமைதி; நிம்மதியாக இருங்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
நடிகர் ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன்; ரஜினியின் ஆன்மிக அரசியல் குரல், தேர்தலில் எதிரொலிக்கும்; திராவிட கட்சிகளுக்கு எதிராக ரஜினி முன்னெடுத்த ஆன்மிக அரசியல் வெற்றி பெறும்.
- இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்
'நேற்று தானே, 234 தொகுதிகளிலும், ரஜினி வெல்வார் என்றீர்கள்; அதற்குள் இப்படி ஆகி விட்டதே...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி
ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும், தி.மு.க.,வுக்கு எந்த பின்னடைவும் இல்லை.
- தி.மு.க., முதன்மை செயலர் கே.என்.நேரு
'உங்கள் மைண்ட் வாய்ஸ், 'அப்பாடா... போட்டியிலிருந்து போய் தொலைந்தார்; இனிமேல் வேற்றி தான்...' என, சொல்வது கேட்கிறது. அதை மறைத்து, ரஜினியை கண்டு கொள்ளாதது போல பேசுகிறீர்களே...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., முதன்மை செயலர் கே.என்.நேரு பேட்டி

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலினுக்கு, என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது... தாத்தா கருணாநிதியின் பெயரை சொல்லி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார்.
- நடிகை குஷ்பு
'நீங்கள் பல களம் கண்டவர்; அவர், இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார். அதனால், இளக்காரமா...' என கேட்கத் தோன்றும் வகையில், காங்கிரசிலிருந்து, பா.ஜ.,வுக்கு தாவியுள்ள நடிகை குஷ்பு பேட்டி
ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பு, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நியாயமான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறது. அக்கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
'மூன்றரை ஆண்டுகளாக போராடி வரும் போதே, அது சாதாரண, முக்கியமில்லாத விவகாரம் என்பது தெரியவில்லையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை
நடிகர் ரஜினியை கட்டாயப்படுத்தி, தமிழக அரசியல் களத்தில் தன் சித்து விளையாட்டை நடத்த, பேராசையுடன் செயல்பட்ட, பா.ஜ.,வுக்கு படுதோல்வி கிடைத்துள்ளது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன்
'எந்த பிரச்னையிலும், பா.ஜ.,வை சாடாமல் உங்களால் இருக்க முடியாதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் அறிக்கை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE