உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்: இலவச தரிசனத்திற்கு மறுப்பால் அதிருப்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்: இலவச தரிசனத்திற்கு மறுப்பால் அதிருப்தி

Added : டிச 31, 2020
Share
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜருக்கு சந்தன காப்பு களைதல், புதிய சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.ஏராளமான மரகத நடராஜரை புதிய சந்தன காப்பு அலங்காரத்தில் தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து வெளிநாட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்காக ரூ.250,
 உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்: இலவச தரிசனத்திற்கு மறுப்பால் அதிருப்தி

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி மரகத நடராஜருக்கு சந்தன காப்பு களைதல், புதிய சந்தன காப்பு அலங்காரம் நடந்தது.ஏராளமான மரகத நடராஜரை புதிய சந்தன காப்பு அலங்காரத்தில் தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து வெளிநாட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனத்திற்காக ரூ.250, ரூ.100, ரூ.10 கட்டணத்தில் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வருகை குறைவால் இலவச தரிசனம் நிறுத்தப்பட்டு அனைவரும் ரூ.10 கட்டணத்தில் அனுமதிக்கப்பட்டனர்.காரைக்குடி பெண் பக்தர் சந்திரா கூறுகையில், கூட்டம் இல்லாத நிலையிலும் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்காமல் கட்டணம் வசூலிப்பது தவறு. ஏழை பக்தர்கள் சிரமப்பட்டனர், என்றார்.தேவஸ்தான சமஸ்தான திவான் பழனிவேல் ராஜன் கூறுகையில், இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டது. ரத்து செய்யப்படவில்லை. அதுகுறித்து விசாரிக்கிறேன்,என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X