பெங்களூரு :"புது விதமான கொரோனா பீதிக்கு இடையே, புத்தாண்டை கொண்டாட, மக்கள் தயாராகின்றனர். பெங்களூரில், விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இம்முறை பொது இடங்களில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. ''விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்," என, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:பெங்களூரில், இன்று மாலை, 6:00 மணியிலிருந்து, 144 பிரிவு அமல்படுத்தப்படுகிறது. பொது இடங்களில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து பேர் ஒரே இடத்தில், கூட்டம் சேரக்கூடாது.எம்.ஜி.சாலை, பிரிகேட் சாலை, சர்ச் தெரு, கோரமங்களா, இந்திராநகர் உட்பட, அனைத்து இடங்களிலும், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வாய்ப்பில்லை. பப், கிளப் ரெஸ்டாரென்ட்களில், இசை, நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய அனுமதியில்லை. இப்பகுதிகளில் போலீசார் கண்காணிக்கின்றனர்.பெங்களூரு மட்டுமின்றி, மைசூரு, மங்களூரு, சிக்கமகளூரு, மடிகேரி உட்பட, மற்ற இடங்களின் சொகுசு விடுதிகளில், பார்ட்டி ஏற்பாடு செய்யாமல், கண்காணிக்கும்படி, அந்தந்த மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்றுடன், புது விதமான தொற்று பரவுவதால், மாநில மக்களின் ஆரோக்கியத்தை, மனதில் கொண்டு, நடப்பாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு, கடிவாளம் போடப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE