பெல்லந்தூர் ஏரியில் கார் கண்டுபிடிப்பு

Added : டிச 31, 2020
Share
Advertisement
பெங்களூரு: பெங்களூரின் பெல்லந்துார் ஏரியலிருந்து கார் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மகாதேவபுராவில், பெல்லந்துார் ஏரியை ஆய்வு செய்வது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம், வல்லுனர் கமிட்டி அமைத்துள்ளது. இக்கமிட்டியின் சிபாரிசுபடி, ஏரியை துாய்மையாக்கி, அபிவிருத்தி செய்யும் பணிகளை, கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.ஏரியில் தண்ணீர் குறைந்ததால், சில நாட்களுக்கு

பெங்களூரு:

பெங்களூரின் பெல்லந்துார் ஏரியலிருந்து கார் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மகாதேவபுராவில், பெல்லந்துார் ஏரியை ஆய்வு செய்வது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயம், வல்லுனர் கமிட்டி அமைத்துள்ளது. இக்கமிட்டியின் சிபாரிசுபடி, ஏரியை துாய்மையாக்கி, அபிவிருத்தி செய்யும் பணிகளை, கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது.ஏரியில் தண்ணீர் குறைந்ததால், சில நாட்களுக்கு முன், ஏரியில் புல் கொண்டு செல்வதற்காக, சிலர் வந்த போது, தண்ணீரில் காரின் மேற்பகுதி தெரிவதை கவனித்தனர். உடனடியாக, ஏரி பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட மார்ஷல்களிடம் தெரிவித்தனர். இவர்கள் ஏரியில் மண், செடி, கொடிகளுக்கு இடையே, அரைகுறையாக தெரிந்த காரை கண்டு, மாரத்ஹள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து அங்கு வந்த போலீசார், காரை கிரேன் மூலமாக மேலே கொண்டு வந்தனர். ஐந்தாறு ஆண்டுக்கு முன், கார் ஏரியில் தள்ளப்பட்டுள்ளது. கே.எம். 3 பி - 6643 என்ற எண் கொண்ட இக்கார், இந்திராநகர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. காரில் சில முக்கிய பாகங்களை காணவில்லை. காரின் உரிமையாளரை கண்டுப்பிடிக்க, போலீசார் முயற்சிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X