பெங்களூரு :
கொரோனா பீதிக்கு இடையிலும், 2021 புத்தாண்டை வரவேற்க, பெங்களூரு உட்பட, மாநிலம் முழுவதும் முன்னேற்பாடு மும்முரமாக நடக்கிறது. பிரபலமான ஓட்டல்கள், சொகுசு விடுதிகள், ரெஸ்டாரென்ட்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்து, வாடிக்கையாளர்களை ஈர்க்க முயற்சிக்கின்றன்.ஏழெட்டு மாதமாக, கொரோனா தொற்றின் அட்டகாசத்தால், வெறுப்பிலிருந்த கர்நாடக மக்களுக்கு, புத்தாண்டு வருகை மகிழ்ச்சியளித்துள்ளது. பெங்களூரில் சில நிபந்தனைகளுடன், புத்தாண்டு கொண்டாட வாய்ப்பளித்துள்ளதால், வாடிக்கையாளர்களூ ஈர்க்க, பிரபலமான பப், கிளப், ஓட்டல், ரெஸ்டாரென்ட், சொகுசு விடுதிகள் கவர்ச்சிகரமான சலுகைகளை அறிவித்துள்ளன.பெங்களூரு உட்பட, மாநிலத்தின் அனைத்து ஓட்டல்கள், ரெஸ்டாரென்ட்கள், மால்கள் , கிளப், பப்கள் புத்தாண்டை வரவேற்க, சிறப்பாக அலங்கரிக்கப்படுகின்றன. பார்ட்டி, இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துள்ளன.சிக்கமகளூரு, குடகு, மடிகேரி உட்பட கடலோரம், மலைப்பகுதிகள், ராம்நகர், தொட்டபல்லாபூரில் சொகுசு விடுதிகள், ஓட்டல்கள், ஹோம் ஸ்டேக்களில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு, அறைகள் ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெங்களூரின் எம்.ஜி.சாலை, பிரிகேட் சாலை, ஜெயநகர், பெல்லந்துார் என, வெவ்வேறு பகுதிகளின் பிரபலமான ஓட்டல், ரெஸ்டாரென்ட்களில், புத்தாண்டு பார்ட்டியில் பங்கேற்க, மூன்று, நான்கு மணி நேரத்துக்கு 2,500 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் முன் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE