5.5 லட்ச ரூபாய் மோசடி: வழக்கறிஞரை தேடும் போலீஸ்

Added : டிச 31, 2020
Share
Advertisement
பெங்களூரு:இறந்த கணவர் குடும்பத்திலிருந்து கிடைக்க வேண்டிய சொத்துக்களை, பெற்றுத் தருவதாக கூறி, நர்ஸ் ஒருவரிடம், 5.5 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.பெங்களூரு மத்திகரேவில் வசிப்பவர் சுஜாதா, 39. இவர், தனியார் மருத்துவனையில், செவிலியராக பணியாற்றுகிறார். 1999ல் இவருக்கு, ஹொசதுர்காவை சேர்ந்த நபருடன், திருமணம் நடந்தது. மின் வாரியத்தில் ஒப்பந்த

பெங்களூரு:இறந்த கணவர் குடும்பத்திலிருந்து கிடைக்க வேண்டிய சொத்துக்களை, பெற்றுத் தருவதாக கூறி, நர்ஸ் ஒருவரிடம், 5.5 லட்ச ரூபாய் மோசடி செய்த வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.பெங்களூரு மத்திகரேவில் வசிப்பவர் சுஜாதா, 39. இவர், தனியார் மருத்துவனையில், செவிலியராக பணியாற்றுகிறார். 1999ல் இவருக்கு, ஹொசதுர்காவை சேர்ந்த நபருடன், திருமணம் நடந்தது. மின் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுஜாதாவின் கணவர், 2001ல் மின் கம்பத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார். ஆனால், கணவர் வீட்டிலிருந்து, சுஜாதாவுக்கு கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கவில்லை. இதைப்பற்றி தன் தோழியிடம் கூறினார். அந்த தோழி, தன் சகோதரர் வெங்கடசாமி வக்கீலாக உள்ளார். அவரு உதவுவார் என கூறி, 2019ல் சுஜாதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.கணவர் வீட்டிலிருந்து, சட்டப்படி கிடைக்க வேண்டிய சொத்துக்களை பெற்றுத்தருவதாக நம்ப வைத்த வெங்கடசாமி, சுஜாதாவிடம் பல முறை, ஏழு லட்ச ரூபாயை பெற்றார். அதுமட்டுமின்றி, அரசு மருத்துவமனையில், வேலை வாங்கித்தருவதாக கூறி, 2.5 லட்சம் ரூபாய் பெற்றார். ஆனால் இதுவரை சொத்துகளையும், கிடைக்க செய்யவில்லை. அரசு வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தராமல் மோசடி செய்தார்.இது தொடர்பாக, சுஜாதா கொடுத்த புகாரின்படி, யஷ்வந்த்பூர் காவல் நிலைய போலீசார், வக்கீல் வெங்கடசாமி மீது, வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X