கேரளாவில் துப்புரவு பணிப்பெண் பஞ்., தலைவராக தேர்வு

Updated : டிச 31, 2020 | Added : டிச 31, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்தவர், தற்போது பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.தெற்கு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனம்புரம் பஞ்சாயத்தில், ஆனந்தவள்ளி, 46, பகுதிநேர துப்புரவு பணியாளராக வேலை பார்த்தார். பட்டியலினத்தை சேர்ந்தவரான இவர், கடந்த 10 ஆண்டுகளாக
Kerala, Sweeper, PanchayatPresident, Office, கேரளா, துப்புரவு, பணிப்பெண், பஞ்சாயத்து, தலைவர், தேர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்தவர், தற்போது பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தெற்கு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனம்புரம் பஞ்சாயத்தில், ஆனந்தவள்ளி, 46, பகுதிநேர துப்புரவு பணியாளராக வேலை பார்த்தார். பட்டியலினத்தை சேர்ந்தவரான இவர், கடந்த 10 ஆண்டுகளாக இதே வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்ட ஆனந்தவள்ளி, பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


latest tamil news



10 ஆண்டுகளாக பஞ்சாயத்து அலுவலகத்தில் தூசித்தட்டி, துப்புரவு வேலை செய்து அதே அலுவலகத்தில் தலைவர் நாற்காலியில் அமர்வார் என எதிர்பார்த்திருக்க மாட்டார். தலைவராக பொறுப்பேற்று நாற்காலியில் அமரும்போது, அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், ‛நான் 2011ம் ஆண்டு பகுதி நேர துப்புரவாளராக பணியில் சேர்ந்தேன். ரூ.2000 சம்பளம் வாங்கிய நான் தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனக்கு ரூ. 6000 சம்பளம். எனது பழைய வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murthy - Bangalore,இந்தியா
01-ஜன-202103:30:55 IST Report Abuse
Murthy வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
31-டிச-202021:24:46 IST Report Abuse
THINAKAREN KARAMANI பகுதிநேர துப்புரவாளராக இருந்த உங்களை உங்கள் திறமையை நம்பிப் பஞ்சாயத்துத் தலைவராக ஊர் மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.அந்த மக்களின் நம்பிக்கையைக் காப்பற்றுங்கள். வாழ்த்துக்கள். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
31-டிச-202018:28:34 IST Report Abuse
Bhaskaran லஞ்சம் வாங்காமல் அடித்தட்டு ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள் சகோதரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X