பரிகார பூஜையில் பெண் கொடூர கொலை : ஆட்டோ டிரைவருக்கு வலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரிகார பூஜையில் பெண் கொடூர கொலை : ஆட்டோ டிரைவருக்கு வலை

Added : டிச 31, 2020 | கருத்துகள் (1)
Share
வெள்ளகோவில் : கணவர் கண்முன், மனைவியை அடித்து கொலை செய்து தப்பி சென்ற, ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலை சேர்ந்தவர் ஆறுமுகம், 66. பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். மனைவி ஈஸ்வரி, 60.இந்த தம்பதியரின் மகனுக்கு, திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், குடும்பத்தினர் மனவேதனையில் இருந்தனர். இதையறிந்த, வெள்ளகோவில், திருவள்ளுவர்
 பரிகார பூஜையில் பெண் கொடூர கொலை : ஆட்டோ டிரைவருக்கு வலை


வெள்ளகோவில் : கணவர் கண்முன், மனைவியை அடித்து கொலை செய்து தப்பி சென்ற, ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலை சேர்ந்தவர் ஆறுமுகம், 66. பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். மனைவி ஈஸ்வரி, 60.இந்த தம்பதியரின் மகனுக்கு, திருமணமாகி, 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், குடும்பத்தினர் மனவேதனையில் இருந்தனர். இதையறிந்த, வெள்ளகோவில், திருவள்ளுவர் நகரில் ஆட்டோ ஓட்டி வரும் சக்திவேல், 35 என்பவர், குழந்தை வரம் கிடைக்க பரிகாரம் செய்யலாம், என்று, ஆறுமுகத்திடம் கூறியுள்ளார். இதை நம்பிய அவர், பூஜைக்கு சம்மதித்தார்.
நேற்று அதிகாலை, 4:00 மணி முதல், அவரது கடையில், பூஜை நடத்திய சக்திவேல், தம்பதியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இதில், ஈஸ்வரி இறந்தார். ஆறுமுகம் மயக்கம் அடைந்ததால், கடையை பூட்டி, சக்திவேல் தப்பினார்.காலை, 7:30 மணியளவில் சத்தம் கேட்டு, பக்கத்து கடைக்காரர்கள் பூட்டை உடைத்து திறந்ததில், ஈஸ்வரி இறந்து கிடந்ததும், ஆறுமுகம் உயிருக்கு போராடியதும் தெரிந்தது. அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் கூறுகையில், 'பரிகார பூஜை செய்வதாக கூறிய சக்திவேல், இருவரையும் கடுமையாக தாக்கி, ஈஸ்வரி கழுத்தில் இருந்த, ஐந்து சவரன் நகை, கடையில் இருந்த, 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றார். தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X