பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 742 டிங்கரிங் லேப் அமைக்க ஏற்பாடு

Added : டிச 31, 2020
Share
Advertisement
சென்னிமலை: ''தமிழகம் முழுதும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 742 அடல் டிங்கரிங் லேப் அமைக்கப்பட உள்ளது,'' என, பெருந்துறையில் நடந்த விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம் முன்னிலையில், விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: பெருந்துறை அரசு

சென்னிமலை: ''தமிழகம் முழுதும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 742 அடல் டிங்கரிங் லேப் அமைக்கப்பட உள்ளது,'' என, பெருந்துறையில் நடந்த விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.


ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம் முன்னிலையில், விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தொற்று உள்ளிட்ட நோய்களுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர் விஞ்ஞான உலகத்தை நோக்கி செல்லும் வகையில், 742 அடல் டிங்கரிங் லேப் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், பெருந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தை மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில், 32 ஆசிரியர் பயிற்சி பள்ளி பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X