ஈரோடு: ஈரோட்டில் பல்வேறு இடங்களில், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்க கோரி, போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஈரோட்டில் இருந்து, சென்னைக்கு தினமும் இரவு, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இது, அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. கொரோனாவை காரணம் காட்டி கடந்த மார்ச், 23ல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதன் பின், இன்று வரை இயக்கப்படவில்லை. ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க வேண்டும் என, தென்னக ரயில்வே பொது மேலாளர், சேலம் டி.ஆர்.எம்., உள்ளிட்டோருக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேசமயம், மேட்டுப்பாளையம்-சென்னை, கோவை-சென்னை, ஆலப்புழா-சென்னை, மங்களூர்-சென்னை, திருவனந்தபுரம்- சென்னை, கோவை-லோகமான்ய திலக் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதை கண்டித்து, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், டீசல் ?ஷட், மரப்பாலம், ப.செ. பார்க் ஆகிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ரயில்வே நிர்வாகம் உடனடியாக, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE