பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் டோக்கன் அ.தி.மு.க., வழங்கல்: சென்னிமலையில் தி.மு.க., சாலை மறியல்

Added : டிச 31, 2020
Share
Advertisement
சென்னிமலை: பொங்கல் பரிசு பொருள் வாங்கும் டோக்கனை, அ.தி.மு.க., நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று வழங்கியதால், சென்னிமலையில், தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, 2,500 ரூபாய், அரிசி உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்கவுள்ளது. இதை பெற, வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஈரோடு

சென்னிமலை: பொங்கல் பரிசு பொருள் வாங்கும் டோக்கனை, அ.தி.மு.க., நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று வழங்கியதால், சென்னிமலையில், தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, 2,500 ரூபாய், அரிசி உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்கவுள்ளது. இதை பெற, வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சியில், பொங்கல் பரிசு தொகை டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் நேரில் சென்று வழங்காமல், அ.தி.மு.க., நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று வழங்கியுள்ளனர். இதை கண்டித்து, தி.மு.க., வினர் நேற்று காலை சென்னிமலை கிழக்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் பிரபு, முகாசிபிடாரியூர் ஊராட்சி செயலாளர் ஆறுமுகம், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பொன்னுசாமி, முகாசிபிடாரியூர் ஊராட்சி துணைத் தலைவர் சதீஷ் ஆகியோர் தலைமையில், 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பெருந்துறை மெயின் ரோட்டில், 1010 நெசவாளர் காலனி பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. 40 நிமிடம் நடந்த மறியல் போராட்டத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெருந்துறை டி.எஸ்.பி., செல்வராஜ், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அதிகாரிகள் மூலம் டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தார். இதையடுத்து, நிர்வாகிகள் மறியலை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X