தர்மபுரி: தர்மபுரி அடுத்த குண்டல்பட்டி கால்நடை ஆராய்ச்சி மையம் அருகே, பெண் ஒருவர் கடந்த அக்.,1ல் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக, பல்சர் பைக்கில் வந்த, மூன்று பேர், அப்பெண்ணின் கழுத்திலிருந்த நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அவரது புகாரின்படி, மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, முசிறியை சேர்ந்த மதி, 28, சிவகங்கையை சேர்ந்த உதயசூரியன், 21, பாண்டிதுரை, 23 ஆகியோரை, மதிகோன்பாளையம் போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், இவர்கள் மூவரும், பல்வேறு திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. எஸ்.பி., பிரவேஸ்குமாரின் பரிந்துரையின்படி, மதி, உதயசூரியன், பாண்டிதுரை ஆகியோரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் கார்த்திகா உத்தரவிட்டார். சேலம் மத்திய சிறையிலுள்ள, மூவருக்கும் அதற்கான நகல் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE