நல்லம்பள்ளி: வன்னியர்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, பா.ம.க.,வினர் கடந்த சில நாட்களாக, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, பி.டி.ஓ., அலுவலங்களில், மனு கொடுக்கும் அறப்போராட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் நடந்த போராட்டத்துக்கு, மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். நல்லம்பள்ளி புதிய பஸ் ஸ்டாண்டில் கூடிய, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர், அங்கிருந்து தர்மபுரி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, நல்லம்பள்ளி பி.டி.ஓ.,க்கள் சுருளிராஜன், ஷகிலா ஆகியோரிடம், கோரிக்கை மனுக்களை கொடுத்து, கலெக்டர் மூலம், தமிழக அரசுக்கு அனுப்ப வலியுறுத்தினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி உட்பட மாவட்டத்தின், 10 யூனியன்களிலும், பா.ம.க.,வினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு, பி.டி.ஓ.,க்களிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 10 பி.டி.ஓ., அலுவலகங்களில், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், பா.ம.க., மாநில துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ தலைமையில், பி.டி.ஓ., சரவணபவாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். காவேரிப்பட்டணம் பி.டி.ஓ.,விடம், மாநில துணை அமைப்பு செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில், மனு அளித்தனர்.
* வன்னியர் சங்கம் சார்பில், பென்னாகரம் பி.டி.ஓ.,விடம், பா.ம.க., மாவட்ட தலைவர் செல்வகுமார் மற்றும் பென்னகரம் சேர்மேன் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
* அரூர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பா.ம.க., சார்பில், நகர செயலாளர் ஐயப்பன் தலைமையில், பி.டி.ஓ., மகாலிங்கத்திடம், மனு அளிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE