ஓசூர்: ''புதுச்சேரி மாநிலத்தில், சிறந்த நிர்வாகத்தை வழங்க, தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், எங்களுக்கு கடுமையான நெருக்கடிகள் உள்ளன,'' என, அம்மாநில அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.
ஓசூர், சிப்காட்டில், திசு வளர்ப்பு முறையில் வாழை, முள்ளில்லா மூங்கில் ஆகியவற்றை உருவாக்கும், தனியார் நிறுவனம் இயங்குகிறது. புதுச்சேரியில், முள்ளில்லா பீமா மூங்கில் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் நோக்கில், அம்மாநில வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், அந்நிறுவனத்தை நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில், சிறந்த நிர்வாகத்தை வழங்க, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், எங்களுக்கு கடுமையான நெருக்கடிகள் உள்ளன. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதி மறுக்கப்படுகிறது. அதையும் தாண்டி, மாநில மக்களுக்கு அரசு சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE