பொது செய்தி

தமிழ்நாடு

வழி பிரச்னைக்கு தீர்வு காணாததால் மக்கள் கறுப்புக்கொடி போராட்டம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: வழி பிரச்னைக்கு தீர்வு காணாததால், கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஆனந்தூர் அடுத்த ஏ.ரெட்டிப்பட்டியில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பொதுவழியை, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால், இந்த வழியை

கிருஷ்ணகிரி: வழி பிரச்னைக்கு தீர்வு காணாததால், கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஆனந்தூர் அடுத்த ஏ.ரெட்டிப்பட்டியில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பொதுவழியை, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால், இந்த வழியை பயன்படுத்த முடியாமல், கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இது குறித்து, உரிய தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி, கிராம மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி, போராட்டம் நடத்தினர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 'பொதுவழியை ஆக்கிரமித்துள்ளதால், அவசர தேவைக்கு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து, பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மக்கள் சென்று வர தேவையான பாதையை ஏற்படுத்தித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X