பொது செய்தி

தமிழ்நாடு

'அ.தி.மு.க.,வை உடைக்க நினைப்போரின் மூக்கு உடைக்கப்படும்'

Added : டிச 31, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ''அ.தி.மு.க.,வை உடைக்க நினைப்பவர்களின் மூக்கு உடைக்கப்படும்,'' என, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி.முனுசாமி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதியில் நேற்று நடந்த, அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், வரும் சட்டசபை தேர்தலில்,

கிருஷ்ணகிரி: ''அ.தி.மு.க.,வை உடைக்க நினைப்பவர்களின் மூக்கு உடைக்கப்படும்,'' என, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி.முனுசாமி கூறினார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதியில் நேற்று நடந்த, அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், வரும் சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளர் பழனிசாமி என அறிவித்துள்ளார். அதுதான் எங்களுக்கு வேதவாக்கு. இதில், யாரேனும் இடையில் வந்தால், அவர்கள் வீணாக போய் விடுவார்கள். அவர்களை, நாங்கள் ஒதுக்கி வைத்து விடுவோம். அ.தி.மு.க., தலைமை ஏற்கனவே முதல்வர் வேட்பாளரை முடிவு செய்து விட்டது. எங்கள் கூட்டணிக்கு வருவோர், அதை ஏற்றுக்கொண்டுதான் வருவார்கள் என நம்புகிறோம். அ.தி.மு.க., அரசு, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் முறைப்படி அதிகாரிகள் மூலம் வீடுதோறும் சென்று, டோக்கன் வழங்குகிறது. ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி மீதுள்ள ஆசையால், எதை பேசுகிறோம், எப்படி பேசுகிறோம் எனக்கூட தெரியாமல், பல்வேறு கருத்துக்களை பேசி வருகிறார். அவர் கூறியது போல், அ.தி.மு.க.,வை யாராலும் உடைக்க முடியாது. அவ்வாறு உடைக்க நினைப்பவர்களின் மூக்கு உடைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X