தமிழ்நாடு

தமிழகத்தை பட்டா போட துடிக்கும் தி.மு.க.,: தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி சாடல்

Added : டிச 31, 2020
Share
Advertisement
நாமக்கல்: ''தமிழகத்தை பட்டா போடத்துடிக்கின்ற, தி.மு.க.,வுக்கு, இந்த தேர்தலில், தகுந்த மரணஅடியை கொடுங்கள்,''என, முதல்வர் பழனிசாமி பேசினார்.தமிழகத்தில், 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற, தேர்தல் பிரசாரத்தை, தமிழக முதல்வர் பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் துவக்கினார். இரண்டாம் நாளான நேற்று, சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

நாமக்கல்: ''தமிழகத்தை பட்டா போடத்துடிக்கின்ற, தி.மு.க.,வுக்கு, இந்த தேர்தலில், தகுந்த மரணஅடியை கொடுங்கள்,''என, முதல்வர் பழனிசாமி பேசினார்.


தமிழகத்தில், 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற, தேர்தல் பிரசாரத்தை, தமிழக முதல்வர் பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் துவக்கினார். இரண்டாம் நாளான நேற்று, சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, திறந்த வேனில், சேந்தமங்கலம் மற்றும் அலங்காநத்தம் பிரிவு சாலையில், மக்கள் வெள்ளத்தின் நடுவில் அவர் பேசியதாவது: வரும், 2021ல், சட்டசபை பொதுத்தேர்தல் வரப்போகிறது. எதிர்க்கட்சிகள் எல்லாம் வரும். குறிப்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நிறைய கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை வெளியிடுவார். பிரசாரம் மேற்கொள்வார். ஆனால், ஒன்றும் செய்யமாட்டார். அவர்கள் ஆட்சியில் என்ன நன்மை கிடைத்தது, நாட்டு மக்களுக்கு. எண்ணிப்பாருங்கள். ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கும், இல்லம் போய் தட்டிக் கொடுத்த அரசு, அ.தி.மு.க., அரசு. ஏழை எளிய மக்களின் குழந்தைகளின் மருத்துவ கனவை நினைவாக்கியுள்ளது இந்த அரசு. கடைக்கோடியில் குடிசையில் வாழும் குழந்தைகளும், இந்த ஆட்சியில் மருத்துவம் படிக்கின்றனர். தமிழகத்தில், 52 லட்சம் மாணவ, மாணவியருக்கு, மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. உயர்கல்வி படிப்பதில், முதல் மாநிலம் தமிழகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 2019ல், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, மூன்று லட்சத்து, ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளது. அதன் மூலம், நேரடியாக, 5.50 லட்சம் பேர், மறைமுகமாக, ஐந்து லட்சம் பேர் என, 10.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

துறைதோறும் தேசிய விருதுகளைப் பெற்று, இந்த அரசு சாதனை படைத்து வருகிறது. ஆனால், ஒருவருக்கு மட்டும் தெரியவில்லை. இந்த ஆட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றுமே நடக்கவில்லையாம். ஸ்டாலின் கண்ணுக்கு எதுவுமே தெரியவில்லையாம். அவர் கண்ணை தான் டெஸ்ட் பண்ண வேண்டும். தி.மு.க., ஆட்சி குடும்ப ஆட்சி; குடும்ப கட்சி. அங்கு, குடும்பத்தில் இருப்பவர்கள்தான் பதவிக்கு வர முடியும். அரசர்கள் ஆளுகின்றபோது, அரசருக்கு பின், குடும்பத்தில் இருப்பவர்கள்தான், முடிசூடிக் கொள்வர். அதுபோல், தமிழகத்தை பட்டா போடத்துடிக்கின்ற, தி.மு.க.,வுக்கு, இந்த தேர்தலில், தகுந்த மரணஅடியை கொடுங்கள். அ.தி.மு.க.,வில், சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் வரை உயரலாம். ஆனால், தி.மு.க.,வில் ஒருக்காலும் நடக்காது. தி.மு.க.,வின் அராஜக ஆட்சிக்கு வழி விடாமல், அ.தி.மு.க.,வை தொடர்ந்து மக்கள் ஆதரிக்க வேண்டும். சேந்தமங்கலம் பகுதிக்கு, அரசு கலைக் கல்லூரி, புதிய நீதிமன்றம் கொடுத்துள்ளோம். மேலும், 295 சாலைகள், 155 கோடி மதிப்பீட்டில், சேந்தமங்கலம் பகுதியில் போடப்பட்டுள்ளன. நான்கரை ஆண்டுகளில், 6,500 ஜாதிச்சான்றிதழ், கொல்லிமலை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். அமைச்சர் தங்கமணி, எம்.எல்.ஏ., சந்திரசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X