நாமக்கல்: வரும், 3 காலை, தொகுதி, 1ல், அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை போட்டி தேர்வு, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூர் தாலுகா உள்ளடக்கிய, 25 தேர்வு மையங்களில், மொத்தம், 7,741 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதற்காக, 25 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த, 25 மையங்களிலும், 25 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு எழுதும்போது, முறைகேடுகள் நடக்காமல் இருக்க, துணை கலெக்டர் நிலையில், இரண்டு பறக்கும் படை அலுவலர்களும், துணை தாசில்தார் தலைமையில், ஐந்து நடமாடும் குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி தேர்வர்கள், தரைத்தளத்திலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும், சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள், தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள, கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்தில், தேர்வாணைய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு, வருங்காலங்களில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு நிரந்தரமாக தடைவிதிக்கப்படும். தேர்வு மையத்திற்குள், கைப்பை, புத்தகங்கள், மொபைல் போன், கால்குலேட்டர், மின்னணு, கைகடிகாரங்கள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE