பொது செய்தி

இந்தியா

2020ல் பயங்கரவாத சம்பவங்கள் குறைவு: காஷ்மீர் டிஜிபி தகவல்

Updated : டிச 31, 2020 | Added : டிச 31, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஸ்ரீநகர்: 2018, 2019 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள், குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டு 15 போலீசார் தங்கள் பணியின் போது கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 3,500
Kashmir, Terrorist, DGP, Dilbag Singh, காஷ்மீர், பயங்கரவாத_சம்பவங்கள், குறைவு, டிஜிபி, தில்பாக் சிங்

ஸ்ரீநகர்: 2018, 2019 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள், குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டு 15 போலீசார் தங்கள் பணியின் போது கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 3,500 போலீசார் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மீண்டுள்ளனர். 2018, 2019 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள், குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.


latest tamil news


அதேநேரத்தில், 2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில், பயங்கரவாத அமைப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், அவர்களில் 70 சதவீதம் பேரை மீட்டு, கைது செய்துள்ளோம் என்பது சாதகமான அம்சமாகும். பாகிஸ்தான் ஊடுருவல் முயற்சிகள் இருந்தபோதிலும், கடந்த 3, 4 ஆண்டுகளில் இந்த 2020ம் ஆண்டு ஊடுருவல் வழக்குகள் மிகக்குறைவாகும். பாக்., பயங்கரவாதிகள் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் பணத்தை டிரோன்கள் மூலம் வழங்க முயன்று தோல்வியடைந்தனர்.

ஜம்முவில் 12 பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 3 ஆக குறைந்துள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள அந்த பயங்கரவாதிகளை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
31-டிச-202019:51:59 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy மயிலே மயிலே என்றால் இறகு போடுமா ? விஜயகுமார் தான் தேவை.
Rate this:
Cancel
Gggg - ,
31-டிச-202014:56:50 IST Report Abuse
Gggg Ggggg
Rate this:
Cancel
லிங்கம்,சென்னை அப்புறம்...சந்தனக் கட்டை வீரப்பனை வீழ்த்திய விஜயக்குமாரை ஆலோசகராக அதுக்குத்தானே போட்டோம்...2021 ல் சுத்தமா தீவிரவாத தாக்குதல் நடக்காமல் பார்த்துக்குங்கஜி...!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X