வாஷிங்டன்: வரும் ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், வெள்ளை மாளிகை ஊழியர்கள் ஆகியோர் தேர்வின் இறுதி வடிவம் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் 61 சதவீத ஊழியர்கள் பெண்கள் எனவும் 54 சதவீதம் பேர் நிறத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கருப்பின மக்களுக்கு முக்கிய பதவிகள் வழங்குவதை காலகாலமாக செய்துவரும் ஜனநாயக கட்சி, ஜோ பைடன் அமைச்சரவையில் அதிக கருப்பின கட்சி உறுப்பினர்களுக்கு இடம் அளிக்க முடிவெடுத்துள்ளது.

மேலும் வெள்ளை மாளிகை ஊழியர்களின் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு 11 சதவீத இடம் அளித்து அவர்களை ஆதரிக்க உள்ளதாக ஜோ தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை ஊழியர்களில் 40 சதவீதம் பேர் குடும்பஸ்தர்கள் அவர். இவர்களில் 20 சதவீதம் பேர் அமெரிக்காவின் முதல் குடிமக்கள்.

அமெரிக்காவில் குடியேறி குடியுரிமை பெற்று வாழும் மக்களுக்கு பூர்வீக அமெரிக்கர்கள் போலவே சம உரிமை அளிக்க ஜோ பைடன் இந்த முடிவை எடுத்துள்ளார். இவர்களில் இந்தியர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் பள்ளி, கல்லூரிகள், பல்கலை, பொது இடங்கள் திறக்கப்பட்டு அமெரிக்காவை இயல்பு நிலைக்கு கொண்டுவர வெள்ளை மாளிகை ஊழியர்கள் அயராது உழைப்பது என்று ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE