சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பசையாகும் பிளாஸ்டிக் குப்பை!

Added : டிச 31, 2020
Share
Advertisement
வீணாகும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யலாம். ஆனால், 'மேற்சுழற்சி' செய்ய முடியுமா? முடியும். பிளாஸ்டிக்கை மேற்சுழற்சி செய்து, பசைகளை தயாரிக்க முடியும். இதற்கான யுக்திகளை உருவாக்கியுள்ளனர், அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.உலோகங்கள், காகிதம் போன்றவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம், மதிப்புக்கூட்டப்பட்ட புதிய பொருட்களை உருவாக்க முடியும்.
பசையாகும் பிளாஸ்டிக் குப்பை!

வீணாகும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யலாம். ஆனால், 'மேற்சுழற்சி' செய்ய முடியுமா? முடியும். பிளாஸ்டிக்கை மேற்சுழற்சி செய்து, பசைகளை தயாரிக்க முடியும். இதற்கான யுக்திகளை உருவாக்கியுள்ளனர், அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

உலோகங்கள், காகிதம் போன்றவற்றை மறுசுழற்சி செய்வதன் மூலம், மதிப்புக்கூட்டப்பட்ட புதிய பொருட்களை உருவாக்க முடியும். ஆனால், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்தால், முன்பு இருந்ததைவிட மதிப்புக் குறைந்த பொருட்களையே உருவாக்க முடியும்.

இந்த சிக்கலை தவிர்க்கிறது 'அப்சைக்கிள்' எனப்படும் மேற்சுழற்சி முறை. இந்த முறையை பயன்படுத்தி, பிளாஸ்டிக்கிலிருந்து, பாலிஎத்திலினை பிரித்தெடுத்து, சில புதிய வினையூக்கிகள் மூலம் பசைகளை தயாரிக்கலாம்.

இந்த பசை, செயற்கை இடுப்பு மற்றும் மூட்டுக்களை பொருத்துகையில், பயன்படுத்தலாம். மேலும், பிளாஸ்டிக் மற்றும் உலோகப் பொருட்களை ஒட்டவும் பயன்படும். மற்ற பசைகளைவிட மேற்சுழற்சி பிளாஸ்டிக் பசைக்கு, 20 சதவீதம் கூடுதல் ஒட்டும் தன்மை உள்ளதாக கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X