சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

நுண்ணறிவுள்ள சில்லு!

Added : டிச 31, 2020
Share
Advertisement
செயற்கை நுண்ணறிவு துறை வேகமாக வளர்கிறது என்பதற்கு ஒரு சான்று இது. வழக்கமான கணினிகளுக்கான சில்லுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, செயற்கை நுண்ணறிவு கணினிகளுக்கென்றே புதிதாக, அதிவேகமான கணக்கிடும் திறன் கொண்ட சில்லுகள் தயாரிக்கப்படுவது அதிகரித்துள்ளது.பிரிட்டனை சேர்ந்த கிராப்கோர் என்ற சில்லு நிறுவனம், ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு கணினி சில்லினை தயாரிக்க இருப்பதாக
நுண்ணறிவுள்ள சில்லு!

செயற்கை நுண்ணறிவு துறை வேகமாக வளர்கிறது என்பதற்கு ஒரு சான்று இது. வழக்கமான கணினிகளுக்கான சில்லுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, செயற்கை நுண்ணறிவு கணினிகளுக்கென்றே புதிதாக, அதிவேகமான கணக்கிடும் திறன் கொண்ட சில்லுகள் தயாரிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த கிராப்கோர் என்ற சில்லு நிறுவனம், ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு கணினி சில்லினை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த சில்லினை பொருத்திய செயற்கை நுண்ணறிவு கணினி, “ஒரு பிட்சா பெட்டியின் அளவே இருக்கும்” என, கிராப்கோரின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சில்லின் தகவல் அலசும் திறன், ஒரு பெட்டாபிளாப் என்ற அளவில் இருக்கும்.

'இன்டெலிஜென்ஸ் புராசசிங் யூனிட்' என்று அழைக்கப்படும் இந்த சில்லுகளை, இன்டெல், என்விடியா போன்ற சில்லு ஜாம்பவான்களும் சில ஆண்டுகளாக தயாரித்து வருகின்றன. எனவே, கிராப்கோரின் புதிய சில்லு இவற்றின் நேரடி போட்டியாளராக இருக்கும். இதன் அடிப்படையில், அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்திருப்பதோடு, புதிதாக,1,630 கோடி ரூபாய் முதலீட்டையும் கிராப்கோர் பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X