வூஹானில் ஆய்வு மேற்கொள்ள முயலும் உலக சுகாதார அமைப்பை தடுக்கும் சீனா?

Updated : டிச 31, 2020 | Added : டிச 31, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
பீஜிங்: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் உலகுக்குப் பரவியது. இதனையடுத்து இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு தடுப்பு மருந்துகளை விநியோகித்து வருகின்றன.அமெரிக்காவின் பைசர்-பயான்டெக் தடுப்பு மருந்து அதிக பலன் அளிக்கிறது. கொரோனா வைரஸ்-ன் வீரியம்
China, Wuhan, CoronaVirus, WHO, MakingItHarder, Solve, Mystery, CovidBegan, கொரோனா, சீனா, வூஹான், உலக சுகாதார அமைப்பு

பீஜிங்: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் உலகுக்குப் பரவியது. இதனையடுத்து இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தற்போது அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு தடுப்பு மருந்துகளை விநியோகித்து வருகின்றன.

அமெரிக்காவின் பைசர்-பயான்டெக் தடுப்பு மருந்து அதிக பலன் அளிக்கிறது. கொரோனா வைரஸ்-ன் வீரியம் தற்போது படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாற்றம் பெற்ற புதிய வைரஸ் பரவிவருகிறது.

இதற்கு தற்போது விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வூஹான் நகரில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் இருந்து எவ்வாறு கொரோனா வைரஸ் உலகுக்கு பரவியது என்று கண்டறிய குழு அமைக்கப்பட வேண்டுமென்று ஆசிய நாடுகள் பல வலியுறுத்தின. இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.


latest tamil newsதற்போது இந்த விசாரணைக்கு சீனா சில இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வூஹான் நகரில் இயல்பு நிலை திரும்பி பல மாதங்கள் ஆகிவிட்டன. மக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ளத் துவங்கிவிட்டனர். கொரோனா வைரஸ் பரவிய நகரம் என்ற பெயரைப் பெற்ற வூஹான் நகரம் எதிர்காலத்தில் சுற்றுலாத்தலமாக கூட மாறலாம் என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டது.

குளிர் நிலையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கப்பல்கள் மூலம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதால் வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் என்று கணித சீனா, இந்த பொருட்களை விநியோகிக்கும் பணியாளர்களுக்கு தீவிர சோதனை மேற்கொண்டு தங்கள் நாட்டுக்குள் அனுமதித்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில் தற்போது வரும் ஜனவரி மாதம் உலக சுகாதார அமைப்பின் நிபுணர்குழு வூஹானுக்கு வருகைதர உள்ளது. லான்செட் என்ற மருத்துவ இதழ் நிருபர்களும் சேர்ந்து வூஹானை ஆராய உள்ளனர். இந்த நகரில் வசிக்கும் ஒரு ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடிமக்களிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்படும்.

வூஹானிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள ஹூனான் கடல்உணவு இறைச்சி மார்க்கெட் சோதனை செய்யப்பட உள்ளது. கோலா கரடிகள், நரிகள், எலிகள், பூனை போன்ற சிறிய உயிரினங்கள் ஆகியவற்றின் இறைச்சி இந்த மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன. இவ்வாறு பலவித உயிரினங்களின் இறைச்சிகள் மூலமாக வைரஸ் கிருமிகள் பரவும் அபாயம் மிக அதிகம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து சமூக விலகலுடனும் தகுந்த பாதுகாப்புடனும் இந்த இறைச்சி மார்க்கெட் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவக் குழு ஆய்வு மேற்கொள்ளள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பின் இந்த ஆய்வைத் தாமதப்படுத்த சீன கம்யூனிச அரசு தன்னால் முடிந்த செயல்களை செய்துவருகிறது. இது சீன அரசுமீது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
01-ஜன-202111:12:23 IST Report Abuse
ocean உலகில். மனிதர் வசிக்கும் நிலப்பகுதிகளும் வனங்களும் அந்தந்த தேசத்தின் ஆளுகையில் உள்ளது.இந்த ஆளுகை அந்தந்த தேசத்தின் கீழுள்ள கடல் பகுதிகளில் வாழும் உயிரினங்களின் மீது இல்லை.இது போல் உலகின் ஒட்டு மொத்த கடல் பகுதிகளையும் அதில் வாழும் உயிரினங்களையும் முழு கட்டுப்பாட்டில் வைக்க உலகளாவிய ஒரு பொது கட்டுப்பாட்டின் கீழ் கடல் சார் உயிரின பாதுகாப்பு ராணுவ அமைப்பு தேவை என்பதை சீனனின் குரோனா வைராலஜி உணர்த்தியுள்ளது. அவனது கடல் இறைச்சி வியாபாரத்தால் உலகில் வைரஸ் பரவியுள்ளதை உலக மக்கள் உணரத் தொடங்கி விட்டனர். உலகின் அனைத்து தேசங்களின் கடற்கரை ஓரங்களில் கடல் சார் உயிரின பாதுகாப்பு ராணுவ முகாம்களை அமைக்க வேண்டும்.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
01-ஜன-202109:05:33 IST Report Abuse
ocean வன விலங்குகளுக்கு பாதுகாப்பு இருப்பது போல் இனி கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதுகாப்பளிப்பது மிக அவசியம். இதனை உலக சுகாதார மையம் உடனே செயல் படுத்த வேண்டும். சீனன் கடல் உயிரினங்களைக் கொன்று ஊறப் போட்டு நாற்றத்துடன் இறைச்சி விற்பதை தடுக்கா விட்டால் அவன் கேட்க மாட்டான். கடல் வாழ் உயிரினங்களை எந்த தீங்கு மின்றி பாது காக்க உலக பொது சட்டம் இயற்றப்பட வேண்டும்.இதை ஜக்கிய நாட்டு சபையின் உலக சுகாதார மையம் தான் உடனே செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
ocean - Kadappa,இந்தியா
01-ஜன-202108:53:35 IST Report Abuse
ocean வூஹானை சுற்றிலும் ஹுனான் கடல் உணவு இறைச்சி மார்க்கெட்டுகள் போல் நிறைய இருக்கலாம்.அவைகள் மூலம் வூகானில் உள்ள பல கோடி மக்களின் இறைச்சி உணவு ஈடு செய்யப்படுகின்றன. அந்த இறைச்சிக் கூடங்களையும் உலக சுகாதார மையத்தின் நிபுணர் குழு அங்கு விற்பனையாகும் இறைச்சிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். சீனாவை கடலோர வசிப்பிலிருந்து முழுவதுமாக அப்புறப்படுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயம். அவன் கடலோரங்களில் வசிப்பதால் இத்தகைய வைரலாஜி பரவும் கடல் உணவு இறைச்சி கூடங்களை வைத்து தனது மூர்கத் தனத்தால் உலகத்தை அழித்து வருகிறான். இனி அவன் கடலோர வசிப்பு உலக மக்களை முழுவதும் அழிக்கப் போகிறது. இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் கடலோரங்களில் தான் அமைந்துள்ளன.அங்கெல்லாம் வசிக்கும் மக்கள் சீனாக்காரனின் கடல் உணவு இறைச்சிக் கூடங்களில் செய்யும் இறைச்சி விற்பனை போல் மட்டத்தனமான தொழில்களை செய்ய வில்லை. அவனைப் போல் அவர்களும் தொழில் செய்ய தொடங்கி இருந்தால் உலகம் என்றோ அழிந்து போயிருக்கும். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X