வேளாண் சட்டங்களை திரும்ப பெற கேரள சட்டசபையில் தீர்மானம்

Updated : டிச 31, 2020 | Added : டிச 31, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
திருவனந்தபுரம் :'விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தால், கேரளாவில் பட்டினி ஏற்படும் நிலை உள்ளது. அதனால், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்' என, கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, பஞ்சாப் உட்பட சில மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் வேளாண் சட்டங்கள்
வேளாண் சட்டங்கள்,  கேரள சட்டசபையில் தீர்மானம்

திருவனந்தபுரம் :'விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்தால், கேரளாவில் பட்டினி ஏற்படும் நிலை உள்ளது. அதனால், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்' என, கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, பஞ்சாப் உட்பட சில மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்க, சிறப்பு சட்டசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


latest tamil news



பின்னர் முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மத்திய அரசே கொள்முதல் செய்து, அதை தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விற்க வேண்டும். ஆனால், கொள்முதல் நிலையங்களை மூடிவிட்டு, தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் வகையில், வேளாண் சட்டங்கள் உள்ளன.

விவசாயிகள் போராட்டம் தொடர்ந்தால், கேரளா கடுமையாக பாதிக்கப்படும். நுகர்வு மாநிலமாக உள்ளதால், இங்கு பஞ்சம், பட்டினி ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

தீர்மானத்திற்கு, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியும் ஆதரவு தெரிவித்துள்ளது. சட்டசபையின், ஒரே, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வான, ஓ. ராஜகோபால், இந்த தீர்மானத்துக்கு, முதலில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ''தீர்மானத்துக்கு ஆதரவாக நான் ஓட்டளிக்கவில்லை. அதே நேரத்தில், தீர்மானத்தின் சில பகுதிகளை ஏற்கிறேன்,'' என, அவர் கூறினார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, தீர்மானத்தை எதிர்ப்பதாகவும், புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாகவும், அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
31-டிச-202023:34:49 IST Report Abuse
Allah Daniel யாருமே இல்லாத டீ கடையில் யாருக்கு டீ ஆதிட்டி இருக்கீங்க...கேரளாவில்தான் மண்டிமுறையே இல்லையே...
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
31-டிச-202023:16:21 IST Report Abuse
rajesh இந்த திருட்டு பயலுகளுக்கு மத்திய அரசு எந்த சட்டம் கொண்டுவந்தாலும் அத எதிற்பதை மட்டும் தான் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள்
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
31-டிச-202023:13:38 IST Report Abuse
ANTONYRAJ கேரளாவில் தீவிரவாதத்தை தவிர வேற என்ன பயிரா விளைகிறது? சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற? ஆளுங்கட்சியே தங்கக் கடத்தல்ல ஈடுபடுகிறது அதையும் மீறி அங்கு பஞ்சாயத்து தேர்தல்ல கம்யூனிஸ்ட் கட்சி ஜெயிக்கிறதென்றால் அங்குள்ள மக்கள் ஐந்தறிவு......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X