சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளைஞர் மர்மச்சாவு: உறவினர்கள் மறியல்

Added : டிச 31, 2020
Share
Advertisement
தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே, சிறுமி வீட்டில் தகராறு செய்த இளைஞர், எரிந்த நிலையில் இறந்து கிடந்ததால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, சாத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 30. இவரது நண்பர் யுகேந்திரன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த, 13 வயது சிறுமியை காதலித்துள்ளார்.நண்பரின் காதலுக்கு உதவும் விதத்தில், இரண்டு நாட்களுக்கு

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே, சிறுமி வீட்டில் தகராறு செய்த இளைஞர், எரிந்த நிலையில் இறந்து கிடந்ததால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, சாத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், 30. இவரது நண்பர் யுகேந்திரன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த, 13 வயது சிறுமியை காதலித்துள்ளார்.நண்பரின் காதலுக்கு உதவும் விதத்தில், இரண்டு நாட்களுக்கு முன், சிறுமி வீட்டுக்கு சென்ற கார்த்திக், யுவேந்திரன் உள்ளிட்ட நால்வர், தகராறு செய்துள்ளனர். சிறுமியை கடத்தி, திருமணம் செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

சிறுமியின் தந்தை, யுகேந்திரன், கார்த்திக் உள்ளிட்ட நான்கு பேர் மீதும், திருநீலக்குடி போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணைக்காக கார்த்திக் உள்ளிட்டோர், நேற்று போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும் என, போலீசார் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், சாத்தனுார் மஞ்சள் ஆற்றங்கரையில், கார்த்திக் உடல் முழுதும் எரிந்த நிலையில் சடலாமாக கிடந்தார். அவரது உடல் கும்பகோணம் அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது, மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், கார்த்திக் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் இறப்புக்கு காரணமான சிறுமி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தி, உடலை ஒப்படைத்தனர். கார்த்திக் மரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X