பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: வருத்தப்படாதீர் ரஜினி!

Updated : ஜன 01, 2021 | Added : ஜன 01, 2021 | கருத்துகள் (64)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :என்.வேணுகோபால், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் ரஜினி, அரசியலுக்கு வரவில்லை என்ற உங்களின் முடிவு, ஒரு பக்கம் வருத்தத்தை அளித்தாலும்; மறுபக்கம் ஒரு திருப்தியையும், சந்தோஷத்தையும் அளிக்கிறது. உங்கள் குடும்பம், உடல்நிலை தான், உங்களை இந்த முடிவு எடுக்க
Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


என்.வேணுகோபால், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் ரஜினி, அரசியலுக்கு வரவில்லை என்ற உங்களின் முடிவு, ஒரு பக்கம் வருத்தத்தை அளித்தாலும்; மறுபக்கம் ஒரு திருப்தியையும், சந்தோஷத்தையும் அளிக்கிறது. உங்கள் குடும்பம், உடல்நிலை தான், உங்களை இந்த முடிவு எடுக்க செய்திருக்கும். நீங்கள், தமிழக அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது.

திராவிட கட்சிகளின் மொழி, ஜாதி சார்ந்த அரசியலில், வேறு எந்த கொள்கைவாதிகளுக்கும் இடமில்லை. ஆனால் நீங்கள், 'அரசியலுக்கு வருவேன்' எனக் கூறியவுடன், அரசியல்வாதிகள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்த ஒவ்வொருவரின் பயம், வெறுப்பு, குழப்ப மனப்பான்மை தெளிவாக வெளிப்பட்டு விட்டது.


latest tamil news



பிறரை இகழ்தல் என்பது, உங்களால் முடியாது. அரசியல் என்று வரும்போதே, தொழில் நண்பர்கள் கூட, உங்களை விமர்சித்தனர்.ஒவ்வொரு, 'டிவி' சேனல்களும், உங்கள் பெயரை வைத்து விவாதம் நடத்தி, தங்களின், டி.ஆர்.பி., ரேட்டிங்கை ஏற்றிக் கொண்டன. அவர்கள் தான், உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். உங்களின் துாய்மையான ஆன்மிக சிந்தனைக்கும், அரசியல் கலப்பில்லாத மனித நேயத்திற்கும், எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mukambikeswaran sukumar - bangalore ,இந்தியா
01-ஜன-202123:53:30 IST Report Abuse
mukambikeswaran sukumar ரஜினி ஒரு வெத்துவேட்டு. தலைமைப் பண்புக்கு லாயக்கு இல்லாதவர். பொது வாழ்க்கையில் முன் வைத்த காலை விலக்கிக் கொண்டால் இழுக்கு. நல்ல வேலை முதலிலேயே விலகிக்கொண்டார். இந்த பாதிப்பு ரசிகர் மனதில் ஏற்பட்டதால் இவருடைய படங்கள் சருக்கலாம். இனிமேல் இவருக்கு நிம்மதி இருக்காது எப்பொழுது இவரை குடும்ப நபர்கள் ஆட்டிப் படைக்க ஆரம்பித்தார்களோ.
Rate this:
Cancel
Kalis - Xxx,கனடா
01-ஜன-202123:50:06 IST Report Abuse
Kalis சொந்த காசுல ஒரு நல்லது செஞ்சது இல்ல. வராம இருக்கறது மக்களுக்கு ரொம்ப நல்லது. வந்தாலும் எதுவும் செய்ய போறது இல்ல.
Rate this:
Cancel
mukambikeswaran sukumar - bangalore ,இந்தியா
01-ஜன-202123:46:19 IST Report Abuse
mukambikeswaran sukumar ரஜினி ஒரு வெத்துவேட்டு என்பது தெளிவாகி விட்டது. நல்ல வேலை கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே விலகிவிட்டார். இனிமேல் இவருடைய படங்களும் சருக்கலாம். இவருக்கு நிம்மதி போயிற்று அவருடைய குடும்பத்கால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X