தமிழ்நாடு

43,000 மனுக்கள் ஏற்பு! வாக்காளர் சிறப்பு முகாம்களில்...

Added : ஜன 01, 2021
Share
Advertisement
தேனி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது. மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிஜி தாமஸ் வைத்யன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பேசுகையில், '' நவ.21,22, டிச.12,13 ஆகிய 4 நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாம்களில் 51,152 மனுக்கள் பெறப்பட்டன.அவைகள் தொகுதி வாரியாக

தேனி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது.

மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிஜி தாமஸ் வைத்யன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பேசுகையில், '' நவ.21,22, டிச.12,13 ஆகிய 4 நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாம்களில் 51,152 மனுக்கள் பெறப்பட்டன.அவைகள் தொகுதி வாரியாக ஆய்வு செய்து 43,000 மனுக்கள் ஏற்கப்பட்டன. வாக்காளர் சேர்த்தல் தொடர் பணியாக நடக்கிறது. ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகங்களிலும் இணைய தளம் வழியாக வாக்காளர் சேரலாம்,'' என்றார்.

பெரும்பாலான மனுக்கள் எந்த அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படுகிறது என மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர்வெங்கடேசன் கேள்விக்கு, 'இறப்பு சான்று, உறவினர் வாக்குமூலம், வி.ஏ.ஓ. அறிக்கை பெற்று இறந்த வாக்காளர்கள் அதிகம் நீக்கப்படுவதாகவும், இரட்டை பதிவுகளை இரு முறை ஆய்வு செய்து நீக்குகிறோம்,' என, கலெக்டர் தெரிவித்தார்.

தேர்தல் பார்வையாளர் பேசுகையில் ''தேனி மாவட்டத்தில் வாக்காளர் திருத்தப்பணி 95 சதவீதம் சிறப்பாக நடந்துள்ளது. பிரச்னையான ஓட்டுச்சாவடிகள், அதிக வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடி, மலை பகுதி, நீர் நிலைகளை கடந்து வந்து ஓட்டுபோட வேண்டியது இருந்தால் தெரிவியுங்கள் ,''என்றார். கட்சி பிரதிநிதிகளிடம் பதில் இல்லை.தி.மு.க. மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், பா.ஜ., தே.மு.தி.க., நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். டி.ஆர்.ஓ. ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X