அறிவியல் ஆயிரம்
அஸ்ட்ராஜெனிகா வரலாறு
கொரோனாவுக்கு தடுப்பூசியை ஆக்ஸ்போர்டுடன் இணைந்து கண்டுபிடித்த அஸ்ட்ராஜெனிகா நிறுவனம், நுாற்றாண்டுகளை கடந்தது. கேன்சர், இருதய பாதிப்பு, செரிமான பிரச்னை, நுரையீரல் தொற்று போன்றவற்றுக்கு மருந்துகள் தயாரித்துள்ளது. சுவீடனில் 1913ல் 400 டாக்டர்கள் இணைந்து 'அஸ்ட்ரா' நிறுவனத்தை தொடங்கினர். 1999 ஏப்., 6ல் பிரிட்டனின் ஜெனிகா நிறுவனத்துடன் இணைத்து, அஸ்ட்ரா ஜெனிகா என பெயர் மாறியது. தலைமையகம் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ். இங்கு 70,600 பேர் பணியாற்றுகின்றனர்.
தகவல் சுரங்கம்
முதல் இந்தியர்
அமெரிக்காவில் ராணுவ துறையில் வழங்கப்படும் விருது 'லிஜியன் ஆப் மெரிட்'. இவ்விருது 1942ல் உருவாக்கப்பட்டது. இரண்டு உலகப்போரிலும் பணியாற்றிய பிரிட்டன் ராணுவ அதிகாரி சியாங் கை- ெஷக்கிற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக பதவி வகித்த கரியப்பா, இவ்விருதை பெற்ற முதல் இந்தியர். 1950ல் இவருக்கு வழங்கப்பட்டது. பின் இவ்விருதை 1955ல் மூன்றாவது ராணுவ தளபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீநாகேஷ் பெற்றார். மூன்றாவது இந்தியராக பிரதமர் மோடிக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE