புது டில்லி: ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராசெனகா தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
![]()
|
உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இருப்பினும் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை 1.3 கோடி மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 99 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். 1.5 லட்சம் பேர் இதுவரை இந்நோயால் இறந்துள்ளனர்.
இந்நிலையில் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரகாலத்திற்கு பயன்படுத்த நிபுணர் குழு பச்சை கொடி காட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் கடந்த மாதம் ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் மனு அளித்தது. அந்நிறுவனம் அளித்த தகவல்களை விரிவாக ஆய்வு செய்து இம்முடிவு எடுத்துள்ளனர். இந்திய பொது மருந்து கட்டுப்பாட்டாளர் இப்பரிந்துரை குறித்து இறுதி முடிவு எடுப்பார்.
![]()
|
டிசம்பர் இறுதியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை பிரிட்டன் அங்கீகரித்தது. அங்கு தற்போது அவசரகால பயன்பாட்டிற்கு இத்தடுப்பூசி அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் அவசரகால பயன்பாட்டுக்கு பரிந்துரைத்துள்ளனர். ஒப்புதல் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நிபுணர் குழு கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் டுவிட்டரில் அறிவித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement