பொது செய்தி

தமிழ்நாடு

காரங்காடு சுற்றுலா மையத்தில் குவிந்த பயணிகள்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : புத்தாண்டை முன்னிட்டு தொண்டி அருகேயுள்ள காரங்காடு சதுப்பு நிலக்காடுகளின் சுழல் சுற்றுலா மையம் திறந்த முதல் நாளே வெளியூர் பயணிகள் குவிந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்புநில அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. இப்பகுதியில்கடல்பசு, கடல் குதிரை, கடல்பாசி உள்ளிட்ட கடல்சார் வன

ராமநாதபுரம் : புத்தாண்டை முன்னிட்டு தொண்டி அருகேயுள்ள காரங்காடு சதுப்பு நிலக்காடுகளின் சுழல் சுற்றுலா மையம் திறந்த முதல் நாளே வெளியூர் பயணிகள் குவிந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்புநில அலையாத்தி காடுகள் அமைந்துள்ளன. இப்பகுதியில்கடல்பசு, கடல் குதிரை, கடல்பாசி உள்ளிட்ட கடல்சார் வன உயிரினங்கள்வாழ்கின்றன. ராமநாதபுரம் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பகம்சார்பில், சுற்றுலா பயணிகளை கவர்ந்திடும் வகையில் சதுப்புநிலக்காட்டின்அழகை கண்டுகளிக்க 3 கி.மீ.படகு சவாரி கயாக்கின்எனப்படும் துடுப்பு படகு சவாரி ஸ்நார்கிங் எனப்படும் தண்ணீருக்கு அடியிலுள்ளஉயிரினங்களை கண்டுகளிப்பது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

படகு சவாரி செய்வோருக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக உயிர் காக்கும் மிதவை வழங்கப்படுகின்றது.இதற்கு கட்டணமாக ஒருவருக்கு ரூ.200 செலுத்த வேண்டும். மேலும்சூழல் மேம்பாட்டுகுழுவினர் மூலம் தரமான சுவையுடன் கூடிய மீன் உணவு வகைகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலம் கைவினை பொருட்கள் விற்கப்படுகிறது.கொரோனாபரவல் காரணமாக 2020 ஏப்ரலில் மூடப்பட்டது. தற்போது ஒன்பதுமாதங்களுக்குபின்னர் நேற்று முதல் சூழல் மையம் திறக்கப்பட்டு சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். புத்தாண்டு விடுமுறை என்பதால்காரங்காட்டில் படகு சவாரி செய்ய ராமநாதபுரம் மட்டுமின்றி சென்னை, சிவகங்கை,தேனி, மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து பயணிகள் வந்திருந்தனர்.

உடல் வெப்பபரிசோதனை, சானிடைசர் கைகழுவுதல், முகக்கவசம் அணிவது ஆகிய கொரோனா பரவல் தடுப்புமுறைகளை பின்பற்றி படகுசவாரி மேற்கொள்ள வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சுற்றுலா பயணிகள் குஷிசென்னையைச் சேர்ந்த அனிரூத், அட்சயாகூறுகையில், பலமாதங்களுக்கு பின்னர் ராமநாதபுரத்திற்கு சுற்றுலாவந்துள்ளோம். காரங்காட்டில் படகுசவாரியின் போது அழகிய மீன்கள்துள்ளிகுதித்தது, பறவைகளின் சத்தம், இயற்கையான மாங்ரோவ் காடுகள் மனதைமயக்கியது. ஒருமணிநேரம் போதவில்லை, மீண்டும் வரவேண்டும் என ஆசையாக உள்ளது,'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X