ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் பனங்கிழங்கு சீசன் தொடங்கியுள்ளது. மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் விற்பனை அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பனைக்குளம், அழகன்குளம், உச்சிபுளி, மண்டபம், திருப்புல்லாணி ஆகிய இடங்களில் ஏராளமான பனைமரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, தை, மாசி வரை பனங்கிழங்கு சீசன் கால கட்டமாகும். இவ்வாண்டு விவசாயிகள் பலர் பனை விதைகளை நடவு செய்துள்ளனர். தற்போது தங்கச்சிமடம், பனைக்குளம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் பனங்கிழங்கு அறுவடை தொடங்கியுள்ளது. இவற்றை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரை விலைக்கும் வாங்கி வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்
.ராமநாதபுரம் வியாபாரி எல்லாக்கா கூறுகையில், பனங்கிழங்கு ஒரு மூடை ரூ. 2 ஆயிரம் முதல் 3ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இவற்றை பச்சையாகவும், வேக வைத்தும் ரூ.5 முதல் 10 கிழங்குகள் உள்ள கட்டுக்களாக கட்டி ரூ.20 முதல் ரூ.50 வரை தரத்திற்கு ஏற்றவாறு விற்கிறோம். பனங்கிழங்கு உடல்நலத்திற்கு நல்லது என்பாதல் மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்,'என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE