சொந்த வீட்டில் வாழ்வது தான் ஒவ்வொருவரின் லட்சியம்

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 01, 2021 | கருத்துகள் (18+ 11)
Share
Advertisement
புதுடில்லி :''மத்தியில் பல ஆண்டு கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு, முக்கியத்துவம் கொடுக்கவில்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தின் கீழ், 2022ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 'வீடியோ கான்பரன்ஸ்' இதன்
சொந்த வீடு, லட்சியம், பிரதமர் மோடி,மோடி, நரேந்திர மோடி

புதுடில்லி :''மத்தியில் பல ஆண்டு கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்துக்கு, முக்கியத்துவம் கொடுக்கவில்லை,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தின் கீழ், 2022ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு
கட்டும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.


'வீடியோ கான்பரன்ஸ்'


இதன் ஒரு பகுதியாக, தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில், புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டும் திட்டத்துக்கு, பிரதமர் மோடி, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில், சென்னை; மத்திய பிரதேசத்தில், இந்துார்; குஜராத்தில், ராஜ்கோட்; ஜார்க்கண்டில், ராஞ்சி; திரிபுராவில், அகர்தலா; உத்தர பிரதேசத்தில், லக்னோ ஆகிய நகரங்களில், 'சர்வ தேச வீட்டுவசதி தொழில்நுட்ப சவால் - இந்தியா' திட்டத்தின் கீழ், கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் கட்டப்படும் மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, 1,152 ஆகும். இதன் மொத்த மதிப்பீடு, 116 கோடியே, 26 லட்சம் ரூபாய்.இதில், மத்திய அரசின் பங்கு, 63.36 கோடி ரூபாய். மாநில அரசின் பங்கு, 35.62 கோடி ரூபாய். பயனாளிகளின் பங்கு, 17.28 கோடி ரூபாய். அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: சொந்த வீட்டில் வாழ்வது தான், மக்கள் ஒவ்வொருவரின் கனவாகவும், லட்சியமாகவும் உள்ளது. ஒருவர் சொந்த வீட்டின் கதவை திறக்கும் போது, தன் மரியாதைக்குரிய வாழ்வுக்கான கதவையும் திறக்கிறார். அதனால், சொந்த வீடு என்பது, வெறும் கட்டடம் மட்டும் அல்ல; ஒருவரின் கவுரவத்துடன் சம்பந்தப்பட்டது.


புதிய பாதை


கொரோனாவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில், அவர்களின் அவசியத்தையும் நமக்கு, கொரோனா உணர்த்தியது. வீட்டு வாடகை அதிகமாக இருப்பதால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களால், நகரங்களில் வசிக்க முடியவில்லை. அதனால், குறைந்த வாடகையில் வீடு வழங்கும் திட்டத்தையும், மத்திய அரசு துவக்கியுள்ளது.

மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், வீடு கட்டும் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது இல்லை. கட்டுமானத்தின் தரம் குறித்து கவலைப்பட்டதும் கிடையாது. இதை கவனிக்காமல் இருந்திருந்தால், சூழ்நிலை மோசமாக இருந்திருக்கும். இன்று புதிய அணுகுமுறையை நாடு கையாளுகிறது. இந்த திட்டங்கள், வீடு கட்டும் திட்டத்திற்கு புதிய பாதையை கொடுக்கும். இத்திட்டம், கூட்டாட்சி ஒத்துழைப்பை பலப்படுத்தியுள்ளது. இங்கு வாழும் மக்கள், குறைந்தவருமானம் உடைய தொழிலாளர்கள். இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், குறைந்த காலத்தில் கட்டப்படும்.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.


தமிழகத்தில் 1,152 குடியிருப்பு: பிரதமருக்கு முதல்வர் நன்றிஇந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தமிழகத்தை தேர்வு செய்ததற்காக, பிரதமருக்கு நன்றி. அதிக நகரங்கள் உள்ள மாநிலமாக, தமிழகம் உள்ளது. தமிழக மொத்த மக்கள் தொகையில், 48.45 சதவீதம் பேர், நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். இவற்றில், 14.63 லட்சம் குடும்பத்தினர், நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர். ஜெயலலிதா உருவாக்கிய, 'தொலைநோக்கு திட்டம்- 2023'ல், தமிழகத்தை, 2023க்குள் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற திட்டமிட்டார். நகர்ப்புற ஏழை மக்களுக்கு கட்டி கொடுப்பது, ஜெ.,வின் கனவு.

பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு கட்ட, பயனாளிகளுக்கு, 1.20 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், 72 ஆயிரம் ரூபாய், மத்திய அரசின் பங்கு. மாநில அரசின் பங்கு, 48 ஆயிரம் ரூபாய். இது தவிர, மாநில அரசு கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய், 'கான்கிரிட்' தளம் அமைக்க வழங்குகிறது.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 23 ஆயிரம் ரூபாய், கழிப்பறை கட்ட ஒதுக்கப்படுகிறது. ஏழை மக்கள், கொரோனா காலத்தில் வீடு கட்ட வசதியாக, கூடுதலாக, 70 ஆயிரம் ரூபாய் வழங்க, சமீபத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வீடு கட்ட, 1.70 லட்சம் ரூபாய்க்கு பதிலாக, 2.40 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.

மொத்தம், 2.50 லட்சம் வீடுகள் கட்ட, மாநில அரசு, 1,805 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.தற்போது, பிரதமர் துவக்கியுள்ள, 'சர்வதேச வீட்டுவசதி தொழில்நுட்ப சவால் - இந்தியா' திட்டத்தின் கீழ், புதிய தொழில்நுட்பத்தில், 1,152 குடியிருப்புகள், சென்னை, பெரும்பாக்கத்தில், 116.27 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கடை, இரண்டு அங்கன்வாடி மையங்கள், நுாலகம், பாலகம், ஆறு கடைகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டப் பணி, 15 மாதங்களில் நிறைவடையும். இவ்வீடுகள், நீர்நிலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கும், குடிசைவாசிகளுக்கும் ஒதுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (18+ 11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
02-ஜன-202123:08:36 IST Report Abuse
sankaseshan தமிழகத்தில் பலருக்கு இலவசமாக கிடைப்பதைஅனுபவித்து கொழுப்பு ஏறிவிட்டது . ஒருஉதாரணத்துக்கு சொன்ன 15 லட்சத்துக்குநாக்கை தொங்கப்போட்டு அலைகிக்கிறார்கள் .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
02-ஜன-202119:41:21 IST Report Abuse
g.s,rajan மோடிஜி எங்க அந்த கறுப்புப் பணம் பதினைஞ்சு லட்சத்தைப் போடறேன்னு சொன்னீங்களே???அதை எப்போ போட போறீங்க
Rate this:
Cancel
02-ஜன-202114:25:45 IST Report Abuse
Krishna Murthy அந்த 15 லட்சம் கொடுத்த நாங்களே வீட்டை கட்டிக்கிறோம் உங்களுக்கு புன்னியமா போகும்
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-ஜன-202116:22:43 IST Report Abuse
Malick Rajaஅப்படியெல்லாம் சொல்லக்கூடாது .. ஆமா .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X