உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே கோனேரி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி க.சித்திரைச்செல்வம் 105. 1915ம் ஆண்டில் பிறந்த இவர் தற்போது வரை விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
முதிய வயதிலும், தன்னுடைய மலரும் நினைவுகளை மற்றவர்களிடம் கூறி அசை போடுகிறார். தற்போதுள்ள காலகட்டத்தில் 100 வயதை எட்டிப்பிடிப்பது அரிதிலும், அரிதாகவே உள்ளது. முதியவர் சித்திரைச்செல்வம் கூறியதாவது; 1915ம் ஆண்டில் பிறந்தேன். சுதந்திரம் அடைந்த நேரத்தில் எனக்கு 32 வயது . தற்போது 105 வயதாகிறது. தவறாமல் தேர்தலில் வாக்களித்து வருகிறேன். தினமும் காலை 6:00 மணிக்கு 1 மணிநேரம் நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன்.
கம்பங்கூழ், கேப்பைக்கூழ் சாப்பிடுகிறேன்.வாரம் ஒருமுறை வேப்பஞ்சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கிறேன். நாட்டு வைத்திய முறைகளை கடைப்பிடிப்பதால், மருத்துவமனைக்கு சென்று ஊசி, மாத்திரை எடுத்துக்கொள்வதில்லை. என் வயதை ஒட்டிய முதியவர்கள் இப்பகுதியில் இல்லை. காங்., கட்சியின் மாவட்ட பொதுக்குழுவில் உறுப்பினராக உள்ளேன். வர்மக்கலையும், சிலம்பாட்டமும் தெரியும். மனைவி எனது 45வது வயதில் இறந்துவிட்டார். எனக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். 20க்கும் மேற்பட்ட கொள்ளு பேரன், பேத்திகள் உள்ளனர் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE