பொது செய்தி

தமிழ்நாடு

தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : புத்தாண்டு தினத்தை யொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று புத்தாண்டு தினத்தை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், வாகனத்தில் ராமேஸ்வரம் வந்து கோயிலில் தரிசனம் செய்தனர். பின் தனுஷ்கோடிக்கு வந்த பயணிகள், புயலில் இடிந்த சர்ச், கோயில், ரயில்வே கட்டடங்களை கண்டு ரசித்தனர்.கொரோனா

ராமேஸ்வரம் : புத்தாண்டு தினத்தை யொட்டி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நேற்று புத்தாண்டு தினத்தை யொட்டி தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், வாகனத்தில் ராமேஸ்வரம் வந்து கோயிலில் தரிசனம் செய்தனர். பின் தனுஷ்கோடிக்கு வந்த பயணிகள், புயலில் இடிந்த சர்ச், கோயில், ரயில்வே கட்டடங்களை கண்டு ரசித்தனர்.கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் குவிந்த பக்தர்கள், ஆர்ப்பரிக்கும் கடல் அலை, அழகிய கடற்கரை கண்டு ரசித்தனர்.

மேலும் சிலர் விபரீதம் தெரியாமல் கடலில் உற்சாகமாக குளித்து விளையாடி மகிழ்ந்தனர். அரிச்சல்முனை தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானாவில் சுற்றுலா வாகனம், ஆட்டோக்களை தாறுமாறாக நிறுத்தி இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X